அண்மையில் பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்கள் திடீரென தீப்பிடித்த பல சம்பவங்கள் உள்ளன. உயிருக்கே ஆபத்தான இந்த சம்பவங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பேட்டரி. பேட்டரியில் உள்ள பிரச்சனைகளை சரியாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பேட்டரிகளில் வெடிப்பதற்கும், தீப்பிடிப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானது அதிகாரப்பூர்வ தொலைபேசி சார்ஜரைப் பயன்படுத்தாதது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மலிவான விலையில் கிடைக்கும் சார்ஜர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது ஒரு மோசமான நடைமுறையாகும். பணத்தை பார்க்காமல் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் இருந்து சார்ஜரை வாங்கிப் பயன்படுத்த பழக வேண்டும். ஏனென்றால் பேட்டரியின் குவாலிட்டியை சார்ஜர் வெகுவாக பாதிக்கும்.
மேலும் படிக்க | Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ
பெரும்பாலானவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், சார்ஜ் ஆன பிறகும் நீண்ட நேரம் அதனை ரிமூவ் செய்யாமல் இருப்பது. இந்த நடைமுறை ஆபத்தானதும் கூட. முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜரை கழற்றிவிட வேண்டும். அதாவது பிளக்அவுட் செய்துவிட வேண்டும். இல்லையென்றால் அதிக சூடாகி பேட்டரி வெடிக்கவும் வாய்ப்புள்ளது. பேட்டரி லைஃப் குறையவும் செய்யும். மற்றொரு காரணம், பேட்டரி மேல் திரவ பொருட்கள் படுவது.
தண்ணீர் உள்ளிட்ட ஏதேனும் ஒன்று பேட்டரி மீது பட்டுவிட்டால் வீட்டிலேயே சரி செய்ய முயற்சிக்காமல் வாடிக்கையாளர் மையத்துக்கு செல்வது நல்லது. அங்கு நல்ல சர்வீஸ் செய்யப்படும்போது பேட்டரியில் இருக்கும் பிரச்சனைகள் சரியாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. செல்போன்களைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் கொடுத்து மட்டுமே சர்வீஸ் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்படாத மையங்களில் சர்வீஸ் செய்வது ஸ்மார்ட்போனுக்கும் நல்லதல்ல. உங்களின் பாதுகாப்புக்கும் நல்லதல்ல. ஏனென்றால் இது டெக் வேர்ல்டு.
மேலும் படிக்க | Tips and Tricks: மின்சார வாகனத்தின் பேட்டரியை பராமரிக்க டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR