டிக்டாக் செயலி அதன் வீடியோக்களின் நீளத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. ஏனெனில் யூடியூப் மற்றும் மெட்டாவிற்கு சொந்தமான ஃபேஸ்புக் போன்ற தளங்கள் டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கி இருப்பதால் டிக்டாக் தற்போது அதன் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் நோக்கில் இதனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. கடந்த திங்களன்று டிக்டாக் அதன் பயனர்களை 10 நிமிடங்கள் வரை வீடியோக்களை பதிவேற்ற அனுமதித்தது. இது யூடியூப் தளத்திற்கு சவால் விடும் விதமாக அமைந்து இருக்கிறது என்று கூறலாம்.
மேலும் படிக்க | WhatsApp விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் டாப் 5 அம்சங்கள்
சீன செயலியான டிக்டாக் ஆரம்பத்தில் பயனர்களை 1 நிமிட கால அளவுடன் வீடியோக்களை பதிவேற்ற அனுமதித்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதன் வீடியோவின் கால அளவை மூன்று நிமிடங்களாக அதிகரித்தது, தற்போது வீடியவின் கால அளவை 10 நிமிடங்கள் வரை அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து டிக்டாக் கூறுகையில் '10 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றும் திறனை இன்று வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளது. மேலும் இது உலகெங்கிலும் உள்ள கிரியேட்டர்களின் படைப்பாற்றலை தூண்டும் வகையில் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று கூறியுள்ளது.
டிக்டாக்கை விட தற்போது யூடியூபில் தான் பெரும்பாலானோர் நேரத்தை செலவிடுகின்றனர். இருப்பினும் இது டிக்டாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று இன்சைட்ர் இன்டெலிஜென்ஸ் ஆய்வாளர் ஜாஸ்மின் என்பேர்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் அதிக நேரமுள்ள வீடியோக்கள் டிக்டாக் கிரியேட்டர்களை அதிக பணம் சம்பாதிக்கவும், விளம்பர வர்த்தகத்தை அதிகரிக்கவும் உதவும் என்று கூறினார். யூடியூப் இந்த ஆண்டிலிருந்து பயனர்களை கவரும் வகையிலும், டிக்டாக்கை மிஞ்சும் வகையிலும் சில அப்டேட்டுகளை வழங்க முடிவெடுத்துள்ளது. இந்த வீடியோ பகிர்வு தளமானது ஷார்ட்ஸ் வீடியோ, லைவ் வீடியோ போன்றவை மூலம் பயனர்கள் அதிகளவில் பணம் சம்பாதிக்கவும், கண்டென்ட்டுகளை உருவாக்கவும் உதவுகிறது என்று அதிகாரி நீல் மோகன் கூறுகிறார்.
மேலும் படிக்க | யூடியூபில் வைரல் ஆகா வேண்டுமா? இத பண்ணா போதும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR