பொழுது போக்கிற்காக திரைப்படங்களில் என்னவேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், கதைகளின் எல்லைகளை விரிவுபடுத்துவது முக்கியம் என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்....!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வருமானத்தின் ஆதாரத்தையும், மனைவி மற்றும் பிள்ளைகளின் வருமானத்தையும் கட்டாயம் வேட்புமனுத் தாக்கலின்போது குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று காலை திடிரென்று 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்து இருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வலியுறுத்தி திமுகவினர் இன்று டெல்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதியை இன்று சந்தித்துள்ளனர். ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் அரசுக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, முதலமைச்சர் பழனிச்சானியை நீக்க வலியுறுத்தி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர்.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க உடனே உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் இணைத்ததன் மூலம் தமிழகத்தில் பி.ஜே.பி மீன் வர்த்தகத்தில் செய்துவருகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மேலும் தமிழக பொறுப்பு ஆளுநர் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை தங்கள் தொடக்கத்தில் இருந்து வலியுறுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நந்தியாலா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அகிலப்பிரியாரெட்டியை ஆதரித்து நேற்றிரவு பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்து தனது காருக்கு நடிகரும், எம்.எல்.ஏ-வான பாலகிருஷ்ணாவிற்கு கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் மாலை அணிவித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாலகிருஷ்ணாவின் மீது மாலை ஒன்று விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் பாலகிருஷ்ணா பொது இடம் என்று கூட பார்க்காமல் அருகே நின்ற ரசிகரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை விட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
உத்தரபிரதேச மாநில சமாஜ்வாடி எம்.எல்.ஏ ஜகத்ராம் பஸ்வான் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவுக்கு பெண்கள் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நடனமாடிய பெண்கள் மீது ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்து அவர்களுடன் அநாகரீமாக நடமாடினர். மேலும் அப்பெண்ணின் ஜாக்கெட்டிற்குள் பணத்தை திணித்து அந்த பெண்ணை கண்ட இடங்களில் தொட்டு நடமாடி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் விதிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தி.மு.க., உறுப்பினர்கள் ஸ்டாலின், தியாகராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.
பாஞ்சாப் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியதால் தான் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக சித்து கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரது மனைவியும் பஞ்சாபில் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இருவரும் ஆம் ஆத்மியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பார் நடன மங்கைகளுடன் குடித்து விட்டு நடனமாடிய காட்சி வீடியோவாக வெளியாகி நிதிஷ்குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல பிரதேச காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நபாம் துகி ராஜினாமா செய்துள்ளார்.
அருணாசல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரியாக நபம் துகி இருந்தார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.