ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வாடிப்பட்டியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி வாடிவாசல் அருகில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னையில் மாணவர்கள் போராட்டம்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி வாடிவாசல் அருகில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளது. இதற்கு திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நம் கலாச்சாரத்திற்கு எதிராக, தேசவிரோத சக்தியாக செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ நிறுவனமான பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக திரிஷா இல்லை என அவரது தாயார் உமா தெரிவித்துள்ளார்.
பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் நடிகை திரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக திரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டிருந்தது. இதனால் மனம்நொந்து போன திரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
இதையடுத்து ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை என்று திரிஷா விளக்கம் அளித்திருந்தார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தப்பட்டது. வாடிவாசல் அருகே கூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசல் முன் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூரில் மட்டும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போட்டி நடைபெறும் திடல், காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் போன்றவை சீல் வைக்கப்பட்டன.
பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் நடிகை திரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக திரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டி ருந்தது. இதனால் மனம்நொந்து போன திரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
இந்நிலையில் திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து பாலமேடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாட்டுப் பொங்கல் பூஜைக்காக காளைகளை, அதன் உரிமையாளர்கள் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினர். பின்பு ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற காளைகளை, வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனர். அவற்றை சிலர் அடக்க முயன்றனர்.
நடிகை திரிஷா பீட்டாவின் விளம்பர தூதராக உள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா தான் காரணம் என்பதால் நடிகை திரிஷாவை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கனடா பிரதமர் ஐஸ்டின் கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து செய்தி வீடியோவில் தமிழில் வணக்கம் தெரிவித்து உரையை தொடங்குகிறார்.
Happy Thai Pongal to Tamils celebrating! Joyeux Thaï Pongal aux tamouls qui célèbrent! Iniya Pongal Nalvazhthukkal: pic.twitter.com/AT8YE4t3AB
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமேட்டில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பதை தடுக்க மதுரை மாவட்டத்தில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தனது ஆதரவை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் வார இதழ் ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசியர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது விழாவில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‛நம் கலாசாரம் காப்பாது நம் கடமை' என்றார்.
பிறகு வைரமுத்து கூறியதாவது: 'யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டைப் பற்றி கருத்து கூறிவிடலாம், ஆனால் 'முரட்டுக்காளை' அதைப் பற்றி கருத்து கூறியதுதான் சிறப்பு' என நெகிழ்ந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.