நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை நாளை(ஜூலை 1-ம் தேதி) முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன் பிறகு நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான துவக்க விழா ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு(சரக்கு மற்றும் சேவை வரி) அமுல் படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவின் எதிர்ப்பை மீறி ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஜூன் 13-ம் தேதி தாக்கல் ஜி.எஸ்.டி மசோதா செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதம் நடந்தது.
கடும் அமளிக்கிடையே ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடு முழுவதும் ஒரேவிதமான மறைமுக வரியாக ஜிஎஸ்டியை ஜம்மு-காஷ்மீரில் மாட்டோம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர் கூறியதாவது:-
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மற்ற மாநிலங்களில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால், அந்த வரிவிதிப்பு முறை காஷ்மீரில் அந்த தேதியில் அமல்படுத்த மாட்டாது.
டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டம் டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
66 பொருள்களுக்கு மொத்தம் 133 பொருள்களுக்கான ஜிஎஸ்டி-யைக் குறைக்க வேண்டுமென்று பரிந்துரை வந்திருந்தது. இதில், 66 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. லாட்டரி உள்ளிட்டவை மீதான வரி குறித்து வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிப்பில்லாத வகையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டு உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜுலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என அச்சம் கொந்து உள்ளனர். இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டி:-
புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக்கின் 3வது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:- அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல் அமைச்சர்களின் கூட்டு முயற்சிகளாலேயே புதிய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வை புலப்படும்.
ஜிஎஸ்டி-க்கான கருத்தொற்றுமை கூட்டாட்சிக்கான பெரிய கல்வெட்டாக வரலாற்றில் இடம்பெறும்.
ஒரே தேசம், ஒரே நோக்கம், ஒரே தீர்மானம் என்ற உணர்வை ஜி.எஸ்.டி. பிரதிபலிக்கிறது. அதுபற்றிய விவாதம் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறினார்.
ஜிஎஸ்டி தொடர்பான நான்கு துணை மசோதாக்களுக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் நாடு புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
GST बिल पास होने पर सभी देशवासियों को बधाई | नया साल, नया कानून, नया भारत!
— Narendra Modi (@narendramodi) March 29, 2017
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா பார்லிமென்டில் விவாதம் நடந்தது. லோக்சபாவில் நடந்த விவாதத்தில் மசோதா குறித்த பயன்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கி உரையாற்றினார்.
இதையடுத்து ஜிஎஸ்டி திருத்த மசோதாவுடன் இணைந்த 4 மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்ற திருத்தங்கள் வாரியாக குரல் ஒட்டெடுப்பு நடந்தது. இதில் முதலில் துணை 4 மசோதாக்களில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்கள்:
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சரக்கு-சேவை வரி மசோதா-2017 (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க., தவிர மற்ற கட்சிகள் ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி., மசோதா சில திருத்தங்களுடன் நிறைவேறியது. இதனையடுத்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.