டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 31 வரை பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்சிஆர் பகுதிகளில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டதை அடுத்து, டெல்லி போலீஸ்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்,
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் டெல்லியில் திருடப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரத்தில், அதுவும் தலைமை செயலகத்திற்கு அருகில் முதல்-அமைச்சரின் கார் திருடப்பட்டுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் மெட்ரோ ரயில் விலை நிர்ணய குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தரத் தடையை சுப்ரீம் கோர்ட் இன்று விதித்து. பட்டாசு வெடிப்பதால் மாசைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் வந்தது அப்போது டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தரத் தடையை சுப்ரீம் கோர்ட் விதித்து.
டெல்லி மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு அடுத்த மாதம் ( அக்டோபர் ) முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் மெட்ரோ ரயிலின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதற்கு டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள கருத்து:-
டெல்லியிருந்து மும்பைக்கு மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது டெல்லியில் இருந்து மும்பைக்கு ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி, மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயண நேரம் 2 மணி நேரம் குறைகிறது.
> அதில் ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி ரயில், டெல்லியிருந்து மும்பை செல்ல 17 மணி நேரம் ஆகிறது.
> மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ரயில் 15 மணி நேரம் 35 நிமிடங்களில் டெல்லியில் இருந்து மும்பை வந்தடைகிறது.
டெல்லி ரயில் நிலையத்தில் ராஜ்தானி விரைவு ரயிலின் கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துள்ளானது. ஜம்மு - டெல்லி சென்ற ராஜ்தானி ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து.
இன்று காலை 6:20 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துள்ளானது. இந்த ரயில் விபத்தில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 60_வது நாளாக போராடி வருகின்றனர்.
குர்கிராம் மாவட்டத்தி ரியான் சர்வதேச பள்ளியில் 2-வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள தாகூர் ஃபப்ளிக் பள்ளியில் படிக்கும் 5-வயது பெண்ணை அந்த பள்ளியின் பியூன் விகாஸ் கற்பழித்து உள்ளான்.
வீட்டிற்கு திரும்பிய குழந்தை பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது.இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி விகாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதமாக நடைபெற்றது.
அதன்பிறகு தமிழகம் திரும்பிய விவசாயிகள், சில நாட்கள் கழித்து மீண்டும் டெல்லி ஜன்தர்-மன்தர் பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் கட்ட போராட்டத்தை தொடக்கி இன்றுடன் 56_வது நாளாக போராடி வருகின்றனர்.
கந்தலாவுக்கு அருகே சரக்குப் போக்குவரத்து இரயில் இரண்டு பெட்டிகள்; இன்று ஒருவருக்கொருவர் மணி நேரத்திற்குள் மூன்றாவது தடம்
மகாராஷ்டிரா: கண்டாலா அருகே இன்று(வியாழக்கிழமை) சரக்குப் போக்குவரத்து இரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.
இன்று அதிகாலை உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஓராவுக்கு அருகே ஹவுரா-ஜபல்பூர்-சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள், உ.பி மாநிலத்தில் மூன்றாவது விபத்து நடந்திருக்கிறது.
டெல்லி மெட்ரோ ரயிலில் பயண கட்டண உயர்வுக்கு பின்னர் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் வாயிலாக தெரியவந்ததுள்ளது.
கடந்த மே 10-ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 இருந்து ரூ.10 உயர்த்தப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி காய்ச்சல் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பரிசோதனைக்கு பிறகு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் ராணா தெரிவித்துள்ளார். உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் 50 மற்றும் ரூபாய் 200 நோட்டுகளை வெளியிட்டது.
தில்லி ரிசர்வ் வங்கியிலிருந்து ரூபாய் 50 மற்றும் ரூபாய் ரூபாய் நோட்டுகளில் புதிய குறிப்புகளைத் திரும்பப் பெற மக்கள் வரிசையில் வரிசையாக நிற்கிறார்கள்.
மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
வியாழக்கிழமையான இன்று காலை டெல்லி போலீசாருக்கு தொலைபேசியில் மர்ம நபர் டெல்லி ஐகோர்டு வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சில மணிநேரத்தில் வெடிக்க உள்ளது என்று மர்ம நபர் கூறினான்.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய டெல்லி போலீசார் கடைசி வரை எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும் டெல்லி ஐகோர்டு சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
டெல்லியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம், 20 வயது பெண் ஒருவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அரை நிர்வாண நிலையில் நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
தேசிய தலைநகரான ரோகினி பகுதியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது.
பி.டி.ஐ. அறிக்கையின் படி, அந்த பெண்ணின் நிலை தற்போது மோசமாக உள்ளதாள், பொலிசார் அவரிடம் இருந்து அறிக்கையை இன்னும் பதிவு செய்யவில்லை என கூறியுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றுக்கு தன் உதவியாளர் மற்றும் 22 வயதான அவரது காதலன் ஆகியோருடன் அவர் வெளியே சென்றுள்ளார்.
பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் ஜாட் (62) டெல்லியில் காலமானார்.
உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.
ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு தேர்வானர் பாஜக எம்.பி. சன்வர்லால் ஜாட். பிரதமர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜூலை வரை நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய நீர்வள துறை இணையமைச்சராக இருந்தவர் சன்வர்லால்.
தலைநகர் டெல்லியில் தற்போது மழை பெய்து வருகிறது. டெல்லியில் ஆர்.கே.புறம் மற்றும் விஜய் சௌக் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாடு முழுவதும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயில் கொடுமை தாளாமல் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக் கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்தும் வருகின்றனர். கடுமையாக வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் பெய்து வரும் மழையால் டெல்லி வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.