டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண்களின் தலைமுடி நறுக்கப்படுவது பரப்பரப்பு ஏப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வீட்டில் உள்ள பெண்களின் தலை முடியை யாரோ மர்மமான முறையில் நறுக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா பகுதியில் வீட்டில் இருந்த 4 பெண்களின் தலைமுடி மர்மமான முறையில் நறுக்கப்பட்டுள்ளது.
டெல்லி லோக் நாயக் பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
லோக் நாயக் பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைத்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் 26 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து புகை மூட்டம் வெளியேறிய வண்ணம் உள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அந்த வழியாக செல்லும் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் புறநகரில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. டெல்லி, நோய்டா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
நாடு முழுவதும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயில் கொடுமை தாளாமல் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்தும் வருகின்றனர். கடுமையாக வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
தலைநகர் டெல்லியில் தற்போது மழை பெய்து வருகிறது. டெல்லியில் உள்ள பிரோஸிஷஹ் சாலை மற்றும் விஜய் சௌக் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாடு முழுவதும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயில் கொடுமை தாளாமல் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக் கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்தும் வருகின்றனர். கடுமையாக வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் பெய்து வரும் மழையால் டெல்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பீகார் மாநில முன்னால் முதல்வரும், முன்னால் ரயில்வே அமைச்சரும் ஆனா லாலு பிரசாத் யாதவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் நேற்று வருமான வரித்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அடுத்த கட்டமாக, இன்று லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள மிசா பார்தியின் பண்ணை வீடு உட்பட அவருக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
உ.பி., மாநில போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று டெல்லியிலிருந்து கோண்டா டிப்போவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பரெய்லி மற்றும் ஷாஜகான்பூர் பகுதிக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் 24 அரசு பேருந்து சென்று கொண்டிருந்த அப்போது எதிரே வந்த லாரி மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த மோதலில் இரண்டு வாகனமும் தீப்பிடித்து எரிந்தது.
டெல்லியில் இன்று அதிகாலை 4.25 மணியிளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஹரியானாவின் ரோட்டக் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் உத்தரபிரதேசம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியில் பிறந்து சற்று நேரம் ஆன குழந்தை நடை பழகும் அழகு காட்சி வைரலாக பரவி வருகின்றது.
டெல்லியில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தையை நர்ஸ் உதவியுடன் திடீரென அந்த குழந்தை நடக்க முயற்சித்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.
வீடியோ:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீதான புகாரை வரும் ஜூன் 3-ம் தேதி முதல் நிரூபிக்கலாம் என தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த புகாரை தொடர்ந்தது தேர்தல் ஆணையம் இந்தச் சவாலை விடுத்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி பேசுகையில்:-
பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
திடிரென டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடன் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம், தமிழக அரசியலிலும் நிலவும் மாற்றம் என தமிழகத்தில் ஏதாவது ஒரு செய்தி வந்துக்கொண்டு இருக்கின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லியின் துக்லகாபாத் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக மாணவர்கள் 100 பேருக்கு திடீர் மயக்கமடைந்துள்ளனர்.
பள்ளி வளாகத்துக்கு அருகே உள்ள கன்டெய்னர் கிடங்கில் இருந்த ஒரு கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதகைகள் ஏற்பட்டது. இதனால் சுமார் 100 குழந்தைகள் மயக்கமடைந்தனர்.
செங்கோட்டையில் உள்ள ஒரு கிணற்றில் கையெறி குண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று மாலையில் செங்கோட்டை பகுதியில் வழக்கமான சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து இதனை தொடர்ந்து கூடுதல் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கையெறி குண்டை செயலிழக்க செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பிறகு கையெறி குண்டை விசாரணை நடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 270 வார்டுகளில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியால் 48 இடங்களை தான் கைப்பற்ற முடிந்தது.
தேர்தல் தோல்வியால் கெஜ்ரிவால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். மின்னணு வாக்கு எந்திரம் மீது குற்றம்சாட்டி இருந்த அவர் தோல்வி குறித்து கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் தவறுகள் செய்ததால் தேர்தலில் தோற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் அவர் கூறியதாவது:-
டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டதையடுத்து யாரும் கட்சியை விட்டு செல்ல வேண்டாம் என்று கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சி நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு விலகினர். சில எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு விலக முன்வந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவசரமாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் மூன்று மாநகராட்சிக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் பா.ஜனதா வாக்கு 183 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் குறித்து ஆம் ஆத்மி கூறியதாவது:-
அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
கடந்த 17-ம் தேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி பா.ஜனதா அமோக வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது என தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது.
டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.