குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் குடியரசு தின விழாவின் போது நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 60,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளான சரோஜினி நகர், லாஜ்பத் நகர், கமலா மார்க்கெட், நிஜாமுதீன் மற்றும் புது டெல்லி ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி டெல்லியிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறது.
கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் பீட்டாவிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
கடந்த 14 ஆண்டாக 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கொடுமைப் படுத்திய சுனில் ரஸ்தோகி டெல்லியில் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் சுனில் ரஸ்தோகி. டெல்லியில் வசித்து வருகிறான். இவனுக்கு தற்போது 38 வயதாகிறது. திருமணமாகி மனைவியும், 3 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர்.
1990-ம் ஆண்டு டெல்லிக்கு பிழைப்பு தேடி வந்தான். அப்போது அவனுக்கு வயது 12. டெய்லர்களிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின்னர் சொந்தமாக டெய்லர் தொழில் செய்து வந்தான்.
டெல்லியில் ஆதித்யா ராஜ் இரண்டு வயது குழந்தை மீது ஆசிட் வீச்சு.
டெல்லியை வசிக்கும் சோனி பிரசாத், ஜம்னா தம்பதியருக்கு ஆதித்யா ராஜ் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி முதல் ஆதித்யா ராஜை காணவில்லை. எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை இதனால் பெற்றோர்கள் துக்கத்தில் இருந்துள்ளனர்,
அப்போது அவர்களது வீ்ட்டருகே பாதி முகம் சிதைந்த நிலையில் வலியில் துடிதுடித்தப்படி ஆதித்யா ராஜ் கண்டுபிடிக்கப்பட்டான். உடனடியாக அவனை மருத்துவமனையில் அனுமதித்ததுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நஜீப் ஜங் தனது துணை நிலை கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், இதற்காக தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசிடம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இன்று முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகிள்ளது.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்க இருக்கிறார். மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட உள்ளதாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.