புதுடெல்லி: புதுடெல்லியின் ஷாதராவில் பகுதியில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மேலும் 10 பேர் விபத்தில் காயம் அடைந்தனர். ஐந்து தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்தவர்கள் 10 பேருக்கும் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரிகளை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியா மெகமூத் அக்தருடன் கைது செய்யப்பட்ட மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கிர் ஆகிய இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர். இதையடுத்து, மெஹமூத் அக்தரை இந்தியாவில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று அறிவித்த மத்திய அரசு 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ளது. இங்கு அப்பொழுதும் மக்கள் கூட்டம் காணப்படும். சாந்தினி சவுக் அமைந்துள்ள நயா பஜாரில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இரண்டுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தற்போது வரை வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 15 குழந்தைகள் அட்மிட் செய்து வைத்திருந்த வார்டில் அதிகாலை 3.35 மணியளவில் தீ பற்றி எரிந்தது. ஆறு முதல் ஏழு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக மேலதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் நேற்று 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தலைநகர் டெல்லி சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பேய் போன்ற உருவம் ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ காட்சி பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சி ஒரு கருப்பு உருவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த சாலை வழியாக செல்லும் லாரி, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எந்தவித பாதிப்பும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடந்து செல்கிறது. பிறகு திடீரென மறைந்து விடுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடந்த 30-ம் தேதி மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் வரும் 4-ம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தற்போது கூறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் காவிரி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆலோசனை செய்யவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த அதிமுக கட்சியை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.,க்கள் அனைவரும் டில்லிக்கு சென்று பிரதமர் மோடியை இன்று சந்திக்க திட்டமிட்டனர்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடந்த 30-ம் தேதி மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் வரும் 4-ம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தற்போது கூறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் காவிரி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆலோசனை செய்யவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த அதிமுக கட்சியை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.,க்கள் அனைவரும் டில்லிக்கு சென்று பிரதமர் மோடியை இன்று சந்திக்க திட்டமிட்டனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி எம்,எல்.ஏ சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் சோம்நாத் பார்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஹவுஸ்காஸ் போலீஸ் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது.
டில்லி நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் 2௦ முறை குத்தி கொல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.ஆனால் அந்த நபரோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பெண்ணை வெறி கொண்டு குத்திக் கொன்றுள்ளான். 22 முறை அந்தப் பெண்ணை அந்த நபர் வெறித்தனமாக குத்தியுள்ளான்.
டெல்லியின் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுயுள்ளார், கோல்டன் டெம்பல் என அழைக்கப்படும் சீக்கியர்களின் பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ்க்கு காரில் சென்றார். அப்போது தன் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த இன்னோவா கார் வேகமாக மோதியது. சீட் பெல்ட் அணிருந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது தடையை மீறி டெல்லியில் காற்றாடிகள் விடப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி விடப்பட்ட காற்றாடிகளில் நூல் அறுத்து
சாலையில் பெற்றோருடன் வாகனத்தில் சென்ற குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து, காற்றாடிகள் செய்வதற்கும், விற்பதற்கும் உடனடியாக டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மீறினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்ஷா ஓட்டுநர் 40 வயதுடைய மதிபூல் என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந்தும், வாகனங்களில் சென்ற பலரும் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் இதுவரை 50- க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை அவ்வழியாக சென்ற நபர்கள் யாருமே காப்பாற்ற முன்வராத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரக்கமற்ற செயலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.