டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம் காணப்பட்டது.
ஹரியானாவில் அதிகாலையில் நீண்ட தொலைவு செல்லும் பஸ்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மாநிலங்களில் காற்று மாசுடன் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுடன் கூடிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது. இந்தியா கேட், ராஜ்நாத் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் மட்டும் இல்லாமல் அதன் சுற்றுப்புற பகுதியான நோய்டாவிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது.
1999-ம் ஆண்டு முதல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆஷிஷ் நெஹ்ரா கடந்த நவம்பர் 1-ம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலி தலைமையில் கடைசி போட்டி விளையாடி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு அவருக்கு சக இந்திய வீரர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை தந்தனர். இந்த பிரியாவிடையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சேவாக் என பலர் கலந்துக்கொண்ட வீடியோ காட்சி:-
1999-ம் ஆண்டு முதல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆஷிஷ் நெஹ்ரா நேற்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலி தலைமையில் கடைசி போட்டி விளையாடி உள்ளார்.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி தொடங்குதற்கு முன்னதாக இந்திய அணி சார்பில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்ககியது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேஹ்ராவின் கடைசி சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷிஷ் நெஹ்ரா 1979-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி டெல்லியில் பிறந்தார். இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
அவரை பற்றி சில குறிப்பு:-
38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர்.
1999-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 17 டெஸ்ட் விளையாடி 44 விக்கெட் எடுத்துள்ளார்.
120 ஒருநாள் போட்டியில் விளையாடி 157 விக்கெட் எடுத்துள்ளார்.
26 டி20 போட்டியில் விளையாடி 34 விக்கெட் எடுத்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை நடக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஓய்வு பெற இமாச்சல் மாநிலத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், உடனே அவர் டெல்லி புறப்பட்டு வந்தார். டெல்லி வந்த அவரை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.
தலைநகரம் டெல்லியில் உள்ள கம்லா மார்க்கெட்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சென்ற தீயை அணைதனர். தற்போது வரை இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழந்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் தாயகம் திரும்பியது இந்திய ஹாக்கி அணி!
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற, ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் மலேசிய அணியை இந்தியா ஹாக்கி அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது.
பரபரப்பான ஆட்டத்தின் வெற்றி வாகை சூடிய இந்திய ஹாக்கி அணி இன்று கோப்பையுடன் தாயகம் திரும்பியது.
மின்நிலைய கோளாறு காரணமாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ், பயனாவில் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டது!
மும்பை-தில்லி வழிச் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், விலங்கு ஒன்றின் மீது இடித்ததை அடுத்து ரயிலில் மின்நிலையத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பயனாவில் நிறுத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 13-ம் தேதி அன்று டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 31 வரை பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்சிஆர் பகுதிகளில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து.
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் பெரிய அளவில் சேதம் இல்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.
டெல்லியில் சவுத் பிளாக்கில் பிரதமரின் அலுவலகம் உள்ளது. இங்குள்ள அறை ஒன்றில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சுமார்10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
20 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சிவில் ஏஜென்சியின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட போது, அவரது நாய் குட்டி அவரை காப்பாற்றிய சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.