வட கொரியா அதன் அணுசக்தித் திறனைப் பயன்படுத்தி தொடர்ந்து நட்பு நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
சமிபகாலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணையை விண்ணில் ஏவி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. முன்னதாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் மீது ஏவுகணை செலுத்தி சோதனை செய்து உலக நாடுகளை பயமுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (செவ்வாய்) ஹார்வி சூறாவளியால் பதிக்கப்பட்ட டெக்சாஸினை பார்வையிட செல்கிறார்.
ஹார்வி சூறாவளியால் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பு, அவர்களது வாழ்வுரிமை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமையும் எனவும், இந்த பயணம் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் எனவும் CNN ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
"தற்போது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறோம், திட்டமிடல் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தி ஊடக செயலர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்:-
பயங்கரவாத இயங்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும். ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால் ஆப்கானிஸ்தான் பெரிய இழப்புகளைச் சந்தித்துவருகிறது.
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றய டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். ஆனால் தற்போது இந்த திட்டத்தை அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு ஜூலை 7 மற்றும் 8 தேதி ஜெர்மனி ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்.
இவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்ததாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், விளாடிமிர் புடினும் மற்றும் டொனால்ட் டிரம்பும் 2வது முறையாக சந்தித்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
வரும் 26-ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச இருக்கிறார்.
இந்த சந்திப்பால் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுவடையும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில்அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, மோடி அவரை முதல் முறையாக சந்தித்துப் பேச இருக்கிறார். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்த பிறகு மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு அதிபராக இருந்த பராக் ஒபாமாவுடன் மோடி மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யின் இயக்குனராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கோமியை, கடந்த மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம்செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் பிரசார குழுவுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் தொடர்பு குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்துவதால்தான், ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில் எப்.பி.ஐ.யின் புதிய இயக்குனராக கிறிஸ்டோபர் ரேயை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். இந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக புகார் தொடர்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த எப்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை டிரம்ப் தரப்பு மறுத்து இருந்தது.
இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகை ஆலோசகராக இருக்கும் டிரம்ப்பின் மருமகன் குஷ்னர் ரஷ்ய தூதர் செர்ஜே கிஸ்லயக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த வங்கி உயரதிகாரி செர்ஜே கோர்கோவை சந்தித்து பேசியுள்ளது தொடர்பாக செய்தி வெளியானது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, டிரம்ப் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க அதிபர்களிலேயே பதவியேற்ற பிறகு முதல் சர்வதேச பயணமாக இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
எப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமேவை பதவி நீக்கம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியன் ஸ்பைசர் கூறுகையில்:- எப்பிஐ இயக்குனர் பதவியிலிருந்து ஜேம்ஸ் கோமேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல்களின் கோரிக்கையை அதிபர் ஏற்று கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கு வேலைதேடி செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான ஹச்-1 பி பணி விசா வழங்க கட்டுப்பாடு விதிக்கும் அதிரடி உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஹச்-1 பி விசா என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டினர் அனைவருக்கும் அமெரிக்காவில் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில் இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய விசாக்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்று பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார்.
இந்த திட்டத்தின் படி 2033-ம் ஆண்டு வாக்கில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மசோதாவின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவதோடு மட்டுமின்றி விண்வெளி ஆய்வுகள், ஒரியன் விண்கலத்திற்கான பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
கன்சாஸில் இந்திய இன்ஜினியர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி சிரியா அகதிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவை அமெரிக்காவில் தீவிரவாதிகள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஹிலாரி கிளிண்டனை அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடித்து, டொனால்ட் டிரம்பை வெற்றிபெறச் செய்ய அந்நாட்டு பிரதான கட்சிகளின் இணையதளங்களுக்குள் ரஷியா ஊடுருவி, சில ரகசிய தகவல்களை களவாடியதாக ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் டிரம்ப் தோசை என புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.