அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, டிரம்ப் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க அதிபர்களிலேயே பதவியேற்ற பிறகு முதல் சர்வதேச பயணமாக இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
டிரம்ப் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் சனிக்கிழமை சவுதி சல்மான் மற்றும் முக்கிய உறுப்பினர்களை சந்திக்கிறார். மேலும் 2 நாள் நடைபெறும் கூட்டங்களில் சவுதி அரேபியாவின் இஸ்லாமிய தலைவர்களை சந்திக்கிறார். அச்சந்திப்புகளில் முக்கியமாக ஐஎஸ் இயக்கம் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளை எதிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அதன்பிறகு டிரம்ப் இஸ்ரேல் மற்றும் வாடிகனுக்கு செல்ல இருக்கிறார் என்று டிரம்ப்பின் வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.