மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பையில் பெஹ்ரம்படாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மும்பையில் உள்ள பாந்தரா ரயில் நிலையத்தின் அருகில் ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க தீ அணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டது. இதில் 16 தீ அணைப்பு வாகனமும், 12 தண்ணீர் டாங்கர்களும் கொண்டு மீட்பு பணியில் தீ அணைப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ:-
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பையில் பெஹ்ராம்படாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மும்பையில் உள்ள பாந்தரா ரயில் நிலையத்தின் அருகில் ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க தீ அணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் 16 தீ அணைப்பு வாகனமும், 12 தண்ணீர் டாங்கர்களும் கொண்டு மீட்பு பணியில் தீ அணைப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டது. மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தலைநகரம் டெல்லியில் உள்ள கம்லா மார்க்கெட்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சென்ற தீயை அணைதனர். தற்போது வரை இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழந்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையத்தில் இன்று காலை வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
பட்டாசுகள் இருக்கும் பகுதியிலும் தீ பரவியதால் அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் வெடி குண்டுகள் வெடிப்பது போல இருந்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
மும்பை, தாராவி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
எட்டு தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் டாங்கர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் விபத்து ஏற்பட்ட இடத்துக்கு விரைந்தது. இன்று காலை 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்ப்பட்டது.
கோலாலம்பூரில் அருகே பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா' பள்ளியில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர். தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பலியான மாணவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-வது நடைமேடையில் விபத்து கால மீட்பு பணிக்கு செல்லும் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று பிற்பகல் திடீரென தீப்பிடித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறிது நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
பின்னர், அந்த பெட்டியில் இருந்த பொருட்களை வெளியே எடுத்தனர். அந்த பெட்டியில் உள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
மின்கம்பி அறுந்துவிழுந்ததால் ரயில் பெட்டியில் தீப்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
மும்பையில் அட்லாமவுன்ட் ரோடு பகுதியில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டு தோட்டத்தில் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா மும்பையில் உள்ளது. இந்த பங்களா ஆன்டிலியா என அழைப்படுகிறது. ரெசிடென்சியல் பகுதியாகக் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் இது அமைந்துள்ளது.
லண்டன் நகரில் உள்ள கேம்டன் லாக் மார்க்கெட் கட்டத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அதிவேகமாக பரவி வருகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தீயணைப்பு படைகள் விரைந்தனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்கெட்டில் உள்ள மூன்று மாடிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.
நீண்ட நேரம் இந்த தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் கட்டடம் வெடித்துவிடும் என்றுமக்கள் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை தியாகராயநகரில் தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
தொடர்ந்து கட்டடம் வலுவிழந்ததால், அதை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, 'ஜா கட்டர்' இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடிரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கட்டிடத்தின் தரைதளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தகவலானது தீயணைப்பு மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்தை அடுத்து அலுவலகத்தில் இருந்த தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். நான்கு தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
7 மாடி கொண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதம் அடைந்தன.
சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து தி.நகரில் விதிமீறல் கட்டடம் தொடர்பான வழக்கை விசாரிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
7 மாடி கொண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதம் அடைந்தன.
தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 2-வது நாளாக தீ எரிகிறது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்ததால் இன்று கட்டிடத்தின் 4, 5, 6, 7-வது மாடிகள் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதி முழுவதும் பயங்கர புகை மூட்டம் கிளம்பியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.