நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில், மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் சி.பி.எஸ்.இ. நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
இதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
மே 7-ம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்விற்கு ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ (www.cbseneet.nic.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடக்க உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதற்கான முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் மருத்துவபடிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதற்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வினால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு இதை ஏற்க மறுத்து விட்டது.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் ‘நீட்’ நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவு:-
கடந்த வருடம் 80 இடங்களில் நடந்த நீட் தேர்வானது, இந்த ஆண்டு மேலும் 23 நகரங்களில் நடக்கும். இதன்மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடக்கும். ஐஐடி, ஜேஇஇ தேர்வு நடந்த இடங்களில் நீட் தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு விலக்கு பரிசீலிக்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மாணவர்கள் கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகிறார்கள். மேலும் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
வருகிற மே 7-ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.
மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்த்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.