நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Last Updated : Mar 1, 2017, 11:35 AM IST
நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் title=

நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மாணவர்கள் கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகிறார்கள். மேலும் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

வருகிற மே 7-ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.

Trending News