ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து வரும் 16-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா மற்றும் சேவை உரிமை மசோதாக்களை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், அதேபோல மின்சாரம் தாக்கி மேலும் ஒருவர் சாவு இறந்துள்ளதால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தமிழகரசுக்கு தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமும் விலகும் முன்பே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறியது கண்டிக்கத்தக்கதாகும்.
வீணாகும் மழைநீரை அரசு சேமிக்க தவறுகிறது. எனவே மக்கள் தாங்களாகவே முன்வந்து மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:=
‘‘எங்கெங்கு காணினும் தண்ணீரடா... ஆனால், குடிப்பதற்கு ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லையே’’ என்ற ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது சென்னை மாநகரம் தான். வட கிழக்குப் பருவமழையின் தொடக்க நாளிலேயே சென்னை மாநகரம் மிதக்கும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தாலும் அதை நாம் பயனுள்ள வகையில் சேமிக்கத் தவறுவது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. எனவே இது தொடர்பான விசாரணையை உடனடியாக சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் குட்கா உற்பத்தி செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் எம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் ரூ.9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் குட்கா ஊழல் குறித்த விசாரணையை கையூட்டு தடுப்புப் பிரிவு முடக்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பில் இருந்து தமிழ் மொழியை நீக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
வீண் செலவு மற்றும் கட் - அவுட்களால் பொது மக்கள் அவதி படுவதால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு மிக மோசமான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போன்று தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் அவற்றைத் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் மக்களின் வரிப் பணத்தில் தங்களின் புகழ்பாடும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் தோல்வி வெளிப்படையாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பதாகை வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால் தமிழக அமைச்சர்கள் அதுகுறித்த விதிகளை மீறப்பட்டிருக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
இந்தியாவில் மாசுகளுக்கு 25 லட்சம் பேர் சாவு என்ன செய்யப் போகிறது அரசு என்றும் உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் மாசுகளுக்கு அதிக பேரை பலி கொடுக்கப்படுகிறது. என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
பொறையாறு பணிமனையில் ஏற்பட்டதை விபத்து என்று கூற முடியாது. திட்டமிட்ட படுகொலை என்று தான் கூற வேண்டும். ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். பொறையாரில் இடிந்த கட்டிடங்களைப் போலத் தான் தமிழகத்தில் பெரும்பாலான அரசுக் கட்டிடங்கள் உள்ளன.
இத்தகைய விபத்துக்களைத் தடுக்கமால் 8 பேரை கொன்ற அரசை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியாட்டுள்ளார்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
அண்ணாமலைப் பல்கலை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமால் அரசு வேடிக்கை பார்ப்பதை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியாட்டுள்ளார்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
"உழைப்பாளர்களின் வியர்வை அடங்குவதற்குள்ளாக அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கிவிட வேண்டும் என்பது தான் தமிழர்களின் பண்பாடாகும். ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு செப்டம்பர் ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற புதிய சட்டத்தைக் கொண்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தமிழர்களுக்கு வேலை என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வால், கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி அளவீடாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு எத்தகைய பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்திவிடக் கூடாது என்று அஞ்சினோமா, அத்தகைய பாதிப்புகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி யார் வசம் உள்ளது என்பது பற்றிய குழப்பத்தில் இருந்து மக்களால் இன்னும் மீள முடியவில்லை. காரணம் நாளொன்றுக்கு ஒரு அறிக்கை எனும் விதத்தில் மக்களை குழப்பும் விதத்தில் ஆளும் கட்சியில் இருந்து பல அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் இந்த நிலைமையை விமர்சிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதவது
தமிழகத்திற்கு பாதிப்பில்லாமல் மேகேதாட்டு அணையை கர்நாடக கட்டிக்கொள்ளலாம் என தமிழக அரசு ஒப்புதல் அளித்திருகிறது. இதன்மூலம் தமிழக மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்திருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கை கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.