டெல்லியில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் 50 மற்றும் ரூபாய் 200 நோட்டுகளை வெளியிட்டது.
தில்லி ரிசர்வ் வங்கியிலிருந்து ரூபாய் 50 மற்றும் ரூபாய் ரூபாய் நோட்டுகளில் புதிய குறிப்புகளைத் திரும்பப் பெற மக்கள் வரிசையில் வரிசையாக நிற்கிறார்கள்.
மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ரூ.200 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
இந்த மாதம் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ இந்த புதிய ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது புதிய 200 ரூபாய் நோட்டு இன்று முதல் புழகத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவத்து உள்ளது.
ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ரூ.200 நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்த மாதம் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ இந்த புதிய ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.100 க்கும் ரூ.500 க்கும் இடையே எந்த ரூபாய் நோட்டும் இல்லை. இதனால் சில்லரை பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் மும்பையில் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.
வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6% நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது.
அதேபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25% குறைக்கப்பட்டு 5.75% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ரெப்போ வட்டி 6% இருந்தது.
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி தற்கலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன.
கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது.
இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்திடமும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுமதி வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் 2-வது மாதாந்திர நாணய கொள்கை கூட்டம் இன்றும் நடைபெற்றது. வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.
நாணய கொள்கை கூட்டத்தில் முக்கிய அம்சங்கள்:-
* ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதத்தில் நீடிக்கிறது.
* ரெப்போ ரேட் 6.25 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 6 சதவீதத்திலும் நீடிக்கிறது.
* எஸ்.எல்.ஆர். விகிதம் 0.5% குறைக்கப்பட்டு 20 சதவீதமாக இருக்கும்.
ரான்சம்வேர் மற்றும் வன்னகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் தாக்கலாம் என ரிசர்வ் வங்கிக்கு சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்திய வங்கி செக்டார்களில் அடுத்தக்கட்ட தாக்குதலானது இருக்கலாம் என சைபர் கிரைம் நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள்.
இரண்டு மணி நேரங்களில் நம்முடைய வங்கிகள் பாதிக்கப்படலாம் என நினைக்கிறோம். அனைத்து வங்கிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளோம். நம்முடைய நாட்டில் செயல்படும் ஏடிஎம்களில் பயன்படுத்தப்படும் விண்டோஸ்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளது என சைபர் பாதுகாப்பு நிபுணர் குழு கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.
வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
புதிய 200 ரூபாய் நோட்டுகளை கொண்டுவரும் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாக குழுவினால் கடந்த மார்ச் மாதம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் கிடையாது என்ற நிலையில் அவர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்த அவர்கள் விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
புதிய ரூ. 10 வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விரைவில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இந்த புதிய நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் ஆர்.பட்டேலின் கையெழுத்துடன் அதீத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும். புதிய நோட்டுக்கள் வெளியிடப்பட்டாலும், பழைய ரூ. 10 நோட்டுக்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு ஏடிஎம் மெஷின்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் திருமண செலவிற்கு ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
500, 1000 ரூபாய் செல்லாதது அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
தற்போது அந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். இவ்வாறு இதுவரை ரூ.3 லட்சம் கோடி பொது மக்களால் புதிதாக டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இந்த பணம் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் இருப்புக்கு வந்துள்ளது. இப்போது இந்த ரூ.3 லட்சம் கோடி பணத்தையும் வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் மட்டுமே ரூ.480 கோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் ஏ.டி.எம். செயல்படும். ரூபாய் 2000, நோட்டுகள் கிடைக்கும்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.