சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ உலக மாற்றுத் திறனாளிகள் (03.12.2017) நாளில் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்."
தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்திலும், வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் புகுத்தும் விதத்திலும் நடைபெற்ற தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது என்பது அதிகார வரம்பை மீறிய செயல். மேலும் தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த மரபை அவமதிக்கின்ற செயல் என வைகோ கூறியுள்ளார்.
பயிர்காப்பீடு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரி வைகோ தலைமையில் இன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 10 மணி அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகே, பயணிகள் விடுதி முன்பு, இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ள மானாவாரி விவசாயப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
எனது பக்கத்து கிராமமான மேலாண்மறைநாட்டில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்; ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
தொடக்கப்பள்ளிக்கு மேல் படிக்க வழி இல்லை என்றாலும், தானாகவே வாசிக்கத் தொடங்கி, இலக்கியத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு, கதை, கவிதைகளை எழுதத் தொடங்கினார்.
தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகள் என்பதை 25 ரூபாயாக உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குறியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகள் என்பதை 25 ரூபாயாக உயர்த்தி இருப்பது ஏற்க முடியாதது, கண்டிக்கத்தக்கது ஆகும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பழைய விலையில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் கண்துடைப்பு ஆகும்.
இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அவர்களை சந்தித்த வைகோ.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களை, இன்று காலை (26.10.2017) மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
கர்நாடக அரசு தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூருவில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்பட விளம்பரப் பதாகைகளைக் கிழித்ததோடு, கட் அவுட்டுகளை உடைத்து இருக்கின்றார்கள். திரை அரங்குகளில் படம் பார்த்துக் கொண்டு இருந்த தமிழர்களை விரட்டியடித்து வெளியேற்றி. திரைப்படத்தை ஓட விடாமல் கன்னட வெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ தனது சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதில் அவர் கூறியுள்ள எச்சரிக்கை என்னவென்றால் :
பாரதிய ஜனதா கட்சியின் 40 மாத கால ஆட்சியில் நாடு அனைத்துத் துறைகளிலும் படு தோல்வி அடைந்து இருக்கின்றது. இந்துத்துவ சக்திகள் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் விடுத்துள்ள அறைகூவல்களால் கொந்தளிப்பான சூழல் நிலவுவது ஒரு புறம்; மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பி வந்த “வளர்ச்சி முழக்கம்” வெற்றுக் கூப்பாடு என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி வருகின்றது.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சிவகங்கை சீமையை ஆங்கிலேயார்கள் கைப்பற்றிய பிறகு தலைமறைவாக இருந்து படை திரட்டி அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடித்த வீரப் பெண்மணி வேலு நாச்சியார். உலகில் முதல் பெண்கள் படைப்பிரிவையும், தற்கொலை படைப்பிரிவையும் உருவாக்கியவர் வேலு நாச்சியார்.
வேலுநாச்சியார் வாழ்க்கையை சொல்லும் நாட்டிய நாடகத்தை ஸ்ரீராம் சர்மா என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய வைகோ, இந்த நாடகமானது விரைவில் சினிமாவாகும் என அறிவிப்பை வெளியிட்டார்.
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 36_வது அமர்வில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தான் பேசியதை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:-
முதல் உலகப் பெரும்போர் முடிந்தவுடன், உலகில் போரைத் தவிர்க்கவும், சமாதானத்தை நிலைநாட்டவும் லீக் ஆப் நேசன்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிறுவப்பட்டது. 1933-ல் தொடங்கி 1935-க்குள், பிரமாண்டமான அரங்கங்கள் கட்டடங்கள் கட்டி எழுப்பப்பட்டன. ஆனால், ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அடால்ப் ஹிட்லர் உலகப் போரைத் தொடுத்த பிறகு, இந்த லீக் ஆப் நேசன்ஸ் செயல் அற்றுப் போனது.
‘லங்கேஷ் பத்திரிகே’ ஆசிரியர் பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்துத்துவா வகுப்புவாத மதவெறிக் கும்பலின் ரத்த வெறிக்கு மேலும் ஒரு சிந்தனையாளர் பலி ஆகி உள்ளார். கன்னட பத்திரிகையான ‘லங்கேஷ் பத்திரிகே’ வார இதழின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான ‘கௌரி லங்கேஷ்’ பெங்களூருவில் செப்டம்பர் 5-ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார்.
கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை இவரை சந்திக்கிறார்.
2014-ம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு, சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இருவரும் நேரில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.