அமராவதி பொருத்தமான மாநில தலைநகராக இருக்க முடியுமா என்று சோதிக்கவும், அமராவதியில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்யவும் ஆந்திர அரசு நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது!
தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் சட்டவிரோதமானது என குறிப்பிட்டதற்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என தெலுங்கனா பாஜக தெரிவித்துள்ளது!
கார் ஏற்றுமதியை அதிகரிக்க கியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சென்னை துறைமுகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆனது 2029-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிகிறது!
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறுகள் இணைப்பு திட்டத்தை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரம் கொண்ட 22 தடுப்பணைகள் ஆந்திர அரசால் கட்டப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் அதிமுக அரசுக்கு திமுக தலைவர் முக ஸ்டானில் கண்டனம் தெரிவித்துள்ளார்!
பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது பெரும் கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதி கரையில் கட்டிய அரசு கட்டிடம் இடிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.