குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடலில் பரவிய எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி வழங்கினார்.
முன்னதாக விழா மேடையில் ஜெயலலிதா உருவ படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மீனவக் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கினார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு செயல்படும். ஜெயலலிதா ஆட்சியில்தான் மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித்தொகையை 5,000 ரூபாய் உயர்த்தபட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகன சேவையையும் தொடங்கி வைத்தார். தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை வாகன சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
ரூ111,03 மதிப்பிலான திட்டங்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.3.04 கோடி மதிப்பிலான உபகரணங்களை தீயணைப்பு துறைக்கு வழங்கினார். வணிக வரித்துறை வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அகிலேசுக்கும் அவரது சித்தப்பா வான சிவ்பால் யாதவ்வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்ட்டுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவியேற்றுக் கொண்டுள்ளார். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இதனை அடுத்து புதிய முதலமைச்சராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். மு.க.ஸ்டாலின்,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ள்ட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.