ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் வசித்து வந்த தந்தை, தனது கள்ளக் காதலியின் வற்புறுத்தலின் பேரில் தனது இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தார்.
Kerala Court Verdict on Ranjith Sreenivasan Murder Case in Tamil: பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஆழப்புழா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருது பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதி அரிஸ் கானுக்கு திங்கள்கிழமை (மார்ச் 15) மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளி தற்போது இந்தியானாவின் டெர்ரே ஹாட்டில் உள்ள பெடரல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தூக்கிலிடப்படும் இரண்டாவது குற்றவாளியும் அதே சிறைச்சாலையில் உள்ளார்.
2012 கும்பல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதை நிறுத்த தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. நான்கு குற்றவாளிகளும் நாளை காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர்.
சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் சட்ட விதிமுறைகள் மூலம் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இப்படி தான் நடக்கும் என்றால், சட்டப் புத்தகங்களுக்கு தீ வைத்து கொளுத்துங்கள் என்று நிர்பயாவின் தாயார் கூறினார்.
நிர்பயா கற்பழிப்பு கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளின் தூக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தநிலையில், மீண்டும் தூக்கு தண்டனைக்கான நாள் அறிவிக்கப்பட உள்ளது.
குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றுக் கூறி, குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.