இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டெஸ்ட் தொடர் முடிவுற்ற நிலையில் இப்போட்டிகளில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.
நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5_வது ஒருநாள் கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ்ஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 206 ரன்கள் தேவைப்பட்டது.
தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 37_வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என்ற முன்னிலையில், 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சையே தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய வீரர் ரஹானேவும், ஷிகர் தவானும் தனது பேட்டிங்கை தொடங்கினர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் மற்றும் 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில்
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்து இருந்தது. வீராட்கோலி 143 ரன்னும், அஸ்வின் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்தியா - மேற்கிந்தியத்தீவு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
4 டெஸ்ட் போட்டிகள் இந்த கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. மேலும் கும்ப்ளே - கோலி கூட்டணியில் இந்திய அணி சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.