ஆசிய கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா-மேற்கிந்திய கிரிக்கெட் தொடர் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது!
அடுத்தமாதம் இந்தியாவில் சுற்றுப்யணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது கடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி தலைவர் Jason Holder-ன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைப்பெறவுள்ள நிலையில் இப்போட்டியினை முடித்த கையோடு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி தொடர்ந்து பல கிரிக்கெட் தொடர்களில் பிஸியாக வலம் வரும் நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா அணியினை வீழ்த்த பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.
Think our Skipper @Jaseholder98 can give @TigerWoods a run for it? #WindiesCricket #ItsOurGame pic.twitter.com/EKY6exLURV
— Windies Cricket (@windiescricket) September 27, 2018
இதற்கிடையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் Jason Holder தனது ஓய்வு நேரத்தில் கோல்ப் விளையாடும் காட்சியினை மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியுடனான தொடர் வரும் அக்டோபர் 4-ஆம் நாள் துவங்கவுள்ள நிலையில் இதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் 29-ஆம் நாள் இரண்டு நாள் பயிற்ச்சி ஆட்டமாக Board President’s XI அணியுடன் விளையாடுகிறது!