"விக்ரம்" (Vikram) படத்தில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்க இருந்தார். ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதி சக வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் இன்று அவர் கடிதம் எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் பிக் பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளில் மிகவும் பிஸியாகி இருப்பதே இதற்குக் காரணம் என தெரிகிறது.
காஞ்சீபுரத்தில் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கமலஹாசனுக்கு காயம் ஏற்படவில்லை. கார் சிறிது சேதமடைந்தது. தாக்குதலை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள், தாக்குதல் நடத்தியவரை ரத்தம் வருமளவு அடித்தனர்.
கோயம்பத்தூர் தெற்கு தொகுதிக்கான போட்டியில், மண், மொழி மற்றும் தமிழக மக்களுக்கான போரை நான் பார்க்கிறேன். இதை வெல்லப்போவது நானல்ல, தமிழ் என்று கலம்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் 234 சட்டசபை தொகுதிகளில் 154 இல் போட்டியிடும். மீதமுள்ள 80 இடங்களை அதன் இரு கூட்டணி கட்சிகளான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு மக்கள் நீதி மய்யம் ஒதுக்கியுள்ளது.
தமிழர்களின் பெருமையை பற்றி பேசி தமிழர்களை தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என பாஜக கருதுவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக அதிமுக அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது என்றும் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
அரசியல் களத்தில் குதித்தது முதலே, கமல்ஹாசன் தன்னை புரட்சித்தலைவர் எம்.ஹி.ஆர்-ரின் வாரிசாக காட்டிக்கொள்ள பெரும் முயற்சிகளை எடுத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
தாய்மார்களின் தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு விலையை நிர்ணயிப்பது, படைப்புக்கு நன்றி சொல்லி கடவுளுக்கு ஊதியம் வழங்குவது போன்றதாகும் என்று கங்கனா ட்வீட் செய்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
தொகுதிகளை அடையாளம் காண, தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் கட்சி ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருவதாக AIMIM இன் தமிழ்நாடு பிரிவின் தலைவர் வக்கீல் அகமது கடந்த மாதம் ஒரு செய்தி வலைத்தளத்திடம் தெரிவித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவுக்கு ஆதரவாக பேசி, நேர்மையாக இருப்பதற்காக ஒருவரை வேட்டையாடினால் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.