சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சிக்கு வந்தால், தங்கள் கட்சி செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஏழு அம்ச அரசாட்சிமுறை மற்றும் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிகிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திங்கள்கிழமை வெளியிட்டார். தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தி படைத்த மாநிலமாக மாற்ற தன் அரசாங்கம் உழைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆய்வறிக்கையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவின் கையொப்பம் இருந்தது. அவர் சமீபத்தில் அரசாங்க பதவியிலிருந்து சுயமாக ஓய்வு பெற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைமையக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
MNM கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.
காகிதமில்லாத பசுமை சேனல் ஆளுகை இருக்கும். கணினிகள் மற்றும் பிராட்பேண்ட் (Broadband) வசதிகளுடன் கூடிய ஆன்லைன் வீடுகளுக்கான வசதி செய்யப்படும். இந்த வசதிகள் அரசாங்கத்தால் அனைத்து வீடுகளுக்கும் அளிக்கப்படும். இதன் மூலம் கிராம மக்களுக்கு விளை பொருட்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கிராமங்கள் தன்னிறைவு பெறவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வழி பிறக்கும்.
உண்மையான பசுமை புரட்சி ஏற்படும். மதிப்பு கூட்டு சேவைகள் மற்றும் தொடர் சங்கிலிகள் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். இல்லத்தரசிகள் வீடுகளில் அவர்கள் செய்யும் பணிகளுக்காக அங்கீகாரம் பெறுவார்கள். அதற்கான ஊதியத்தைப் பெறுவார்கள்.
இனி ‘வறுமைக் கோட்டு'க்கு பதிலாக ‘வளமைக் கோட்டுக்கு’ முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிகாரத்திற்கு வந்தால் கட்சி இவை அனைத்தையும் உறுதி செய்யும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு
"நாம் ஊழலை ஒழித்தால், தமிழ்நாட்டைப் போன்று இரண்டு மாநிலங்களை நாம் வளமாக்க முடியும். அரசாங்கத்தில் பணிபுரிந்து இப்போது எங்களுடன் உள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, இந்த ஏழு அம்ச திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றவும், தற்போதைய நிலைக்கு நான்கு மடங்கு அதிகமாக உயர்த்தவும் போதுமான வளங்கள் உள்ளன என்று எங்களிடம் கூறியுள்ளார் என கமல்ஹாசன் காஞ்சீபுரத்தில் (Kancheepuram) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிசிக்கல் கோப்பு முறைகளை குறைத்து அதன் மூலம் முழு ஆளுகை செயல்முறையையும், அதாவது பஞ்சாயத்துகளிலிருந்து முதல்வர் அலுவலகம் வரை காகிதமில்லா செயல்முறையாக மாற்றி 'பசுமை சேனல் ஆளுகையை’ வழங்க எம்.என்.எம் திட்டமிட்டுள்ளது. "சரியான காலத்தில் பணிகளின் ஒப்புதலை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் (Tamil Nadu) அரசு சேவை உரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இது ஏற்கனவே 19 மாநிலங்களில் உள்ளது. ஆனால் குடிமக்கள் சாசனம் இருப்பதைக் காரணம் காட்டி தமிழகம் அதை செயல்படுத்தவில்லை. அப்படி ஒரு சாசனம் இருந்தும் தற்போது அதனால் எந்த பயனும் இல்லை” என்றார் சந்தோஷ் பாபு.
பாரத்நெட் மற்றும் தமிழ்நெட் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலம் அதிவேக இணையத்துடன் கணினியை 'பொதுவான சொத்து வளமாக' வழங்க கமல்ஹாசன் (Kamal Haasan) தலைமையிலான MNM திட்டமிட்டுள்ளது. இது உலகளவில் மனித வள மேம்பாட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே, 2,500 கோடி ரூபாய் உள்ளது. தேவையான மென்பொருள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Tamil Nadu Election: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் தெரியுமா?
அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு பதிலாக, கணினிகள் வீடுகளில் ஒரு நிரந்தர அங்கமாக மாறக்கூடும். மேலும் அவை மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும்” என்று சந்தோஷ் பாபு கூறினார்.
தொழில்கள் தங்கள் படைப்புகளில் சிலவற்றை கிராமங்களில் உள்ள பிரிவுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்ய ஊக்குவிக்கும் அதே வேளையில், இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றி மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலமும் ஒரு நிறுவன பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR