10 வருடங்களுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்து வருவதாகக் கூறி பிரபல திரைப்பட இயக்குநர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
இந்தி நடிகர் சஞ்சய் தத் மீது திரைப்பட தயாரிப்பாளர் சகீல் நூரானி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில்:-
கடந்த 2002-ம் ஆண்டில் நான் ‘ஜன் கீ பஸ்ஸி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரித்தேன். அதில் நடிக்க சஞ்சய் தத் ஒப்புக்கொண்டார். இதற்காக அவர் பேசிய தொகையை அவரிடம் கொடுத்தேன். பின்னர், அவர் திடீரென விலகி கொண்டார். எனினும், பணத்தை திருப்பி தரவில்லை.
இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டபோது, உடனடியாக பணத்தை திருப்பி செலுத்துமாறு சஞ்சய் தத்துக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், அவர் பணத்தை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.