ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை தொடர்ந்து கூடுதலாக 10-நாட்களுக்குத் தொடர்ந்து தேட வேண்டும் என்று கடலோர காவல் படை, விமானப் படைக்கு கேரள அரசு வேண்டுகோள்.
கேரளா மாநிலத்திற்கு வேலை தேடி வரும் வெளிமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடங்களில் செய்திகள் பரவின. ஆனால் இது வெறும் வதந்தி என்று கேரளா அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதைக்குறித்து இந்த அறிக்கையில் கூறியதாவது:-
கேரளாவில் குடியேறிய வெளிமாநிலத்தவர்கள் யாரும் தக்கப்பட வில்லை. இதில் எந்தவித உண்மையும் இல்லை. இது வெறும் வதந்தி. சில சமூக விரோதிகளால் இது பரப்படுகின்றனர். இந்த போலியான செய்திக்கு மக்கள் யாரும் கவனம் செலுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல் அமைச்சர் பிரனாயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல் ஹாசான் தனது டிவிட்டரில் கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் பிரனாயி விஜயனின் நடவடிக்கை மூலம் பெரியாரின் கனவு நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமலின் டிவிட்:-
கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்திற்கு பிறகு மத்திய அரசின் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முதல்வர் பிணராய் விஜயன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இந்த சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ்., செய்தித்தொடரபாளர் சந்திரவத் திமிராக பேசியுள்ளார்.
கேரளாவின் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் போராட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் சந்திரவத் கூறியதாவது:-
கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக திமிராக பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய வருகிறது. ஆனாலும் சந்திரவத், இதை நாட்டு நன்மைகாக தெரிவித்தேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு.
கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ்., செய்தித்தொடரபாளர் சந்திரவத் திமிராக பேசியுள்ளார்.
கேரளாவின் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் போராட்டம் நடக்கிறது. இதில் உஜ்ஜைன் எம்.பி., சிந்தாமன் மால்வியா, பா.ஜ., எம்.எல்.ஏ., மோகன் யாதவ், மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் அச்சம் எழுந்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 140 இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடதுசாரி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் "பினராயி விஜயன்" தேர்ந்து எடுக்கப் பட்டார். அவருடன் 18 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியான எல்டிஎப் 140 இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடதுசாரி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் "பினராயி விஜயன்" தேர்வு செய்யப்பட்டார்.
இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்து பினராயி விஜயன் கூறியதாவது:
கேரள சட்டப் பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 91 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தில் பாஜகவும் மற்றொரு இடத்தில் இதர கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 140 இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.