முழு அடைப்பின் போது பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்த 50 மதுபான பாட்டில்களை திருடியதாக சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
21 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவரின் சடலம் இந்தியானாவில் உள்ள ஒரு முதன்மை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களையும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் இனி கடித பரிமாற்றம் உட்பட அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என தமிழக DGP திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக் கூறி, அவருக்குச் செலவு செய்த பணத்தை திருப்பி வாங்கித் கொடுக்குமாறு சென்னை இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பரபரப்பு நாடுமுழுவதும் நிலவி வரும் நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியினர் காவல்துறை வாகனங்களில் வைத்து பண மூட்டைகளை கைமாற்றுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
காவலர்கள் நியமனத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்!
புழல் மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு முறைக்கேடாக வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில் புழல் சிறை வார்டன்கள் 8 பேர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017-18 ஆண்டிற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் CCTV பொருத்துவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையில் இ-சலான் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து தமிழ்நாடு காவல்துறை குறும்படங்களை வெளியிட்டுள்ளது!
தமிழகத்தில் காவலர் பணி மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இன்று எழுத்து தேர்வு.
காலியாக உள்ள 13,137, 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கும் 1,015 2-ம் நிலை சிறை காவலர் பணியிடங்களுக்கும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 1,512 பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 410 மையங்களில் நடக்கும் இந்த தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.