சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அந்த இடங்களில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்குவதற்காக சித்தா துறையையும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கனமழை காரணமாக, மன்யாட்டா டெக் பார்க், தொழில்நுட்ப பூங்காவிற்குள், கட்டுமானத் தளத்தில் ஒரு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது. இது,மன்யாட்டா டெக் பார்க் அல்ல மன்யாட்டா டெக் நீர்வீழ்ச்சி என்று பலரும் கலாய்த்துள்ளனர். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. 330 ஏக்கர் பரப்பளவிலான மன்யாட்டா டெக் பார்க், 500 நிறுவனங்களின் தளமாக உள்ளது.
சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மட்டும் களத்தில் இருப்பதாகவும், மற்ற அமைச்சர்கள் எங்கே என்று தெரியவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
Chennai Rain: வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் தொடர்ந்து பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அதிக மழை பெய்யவில்லை.
பம்மல் காந்தி ரோடு பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதாக பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த நிலையில், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு.
சென்னை நாவலூர் பகுதியில் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி. அங்கங்கே பள்ளம் உள்ளதால் மக்கள் பீதியுடன் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். ஒரு சிலர் வாகனங்கள் பழுதடைந்து அங்கங்கே நிற்கின்றன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை அக். 16 விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை மற்றும் அதீத கனமழை இருப்பதால் இன்று ஆரஞ் அலர்ட், நாளை ரெட் அலர்ட் மற்றும் நாளை மறுநாள் ஆரஞ் அலர்ட் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.