நடிகர் பிரபுதேவா தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பாடும் பாடல் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் அனைவரும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் வானதி சீனிவாசன் கிண்டலாக பதிலளித்தார். வானதி சீனிவாசன் அளித்த இந்த கிண்டலான பதில் ட்வீட் இப்போது வைரலாகியுள்ளது.
காஞ்சீபுரத்தில் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கமலஹாசனுக்கு காயம் ஏற்படவில்லை. கார் சிறிது சேதமடைந்தது. தாக்குதலை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள், தாக்குதல் நடத்தியவரை ரத்தம் வருமளவு அடித்தனர்.
தேர்தல் பல நாட்கள் நடைபெற்றாலும் அதன் முக்கியமான நிகழ்வு வாக்குப் பதிவு தான். நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதைத் தவிர, வேறு வழிகளிலும் வாக்களிக்கலாம்.
கோயம்பத்தூர் தெற்கு தொகுதிக்கான போட்டியில், மண், மொழி மற்றும் தமிழக மக்களுக்கான போரை நான் பார்க்கிறேன். இதை வெல்லப்போவது நானல்ல, தமிழ் என்று கலம்ஹாசன் கூறியுள்ளார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான 173 வேட்பாளர்களின் பட்டியலை திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தனது தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்களையும் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. ஆளும் அதிமுக-வை தோற்கடித்து கோட்டையில் ஆட்சியைப் பிடிக்க, முழு முனைப்புடன் திமுக நடவடிக்கைகளை மெற்கொண்டு வருகிறது.
அதிமுக-வின் மிகப்பெரிய ஆளுமையாக, மக்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இல்லாமல் கட்சி போட்டியிடும் முதல் தேர்தலாகும் இது.
பிரபல நடிகர் விஜயகாந்த் 2005 இல் தனது கட்சியைத் தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றபோது, அவர் தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை அலைகளை உருவாக்கினார்.
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருந்து வந்தது.
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) மீது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கான மகிழ்ச்சி இப்படி வீடியோவில் வெளிப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.