சாத்துக்குடிபழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. இயற்கை திரவங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன. வைட்டமின் சி தவிர ஏ, பி1, பொட்டாசியம், இரும்புசத்து, கால்சியம், என பல சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டினை நீக்குவதுடன் ஆற்றலை அள்ளிக் கொடுப்பது, உடல் பருனை குறைப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது என இதன் நன்மைகள் ஏராளம். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், நாம் ஏன் தினமும் சாத்துக்குடி சாப்பிட வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.
ஆற்றல்
நல்ல அளவு வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து சாத்துக்குடியில் உள்ளது. இது ஆற்றலை அள்ளிக் கொடுப்பதோடு, உடலில் பல ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை ஏற்படாமல் தடுக்கிறது.
சாத்துக்குடி தினமும் சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க (Bone Health) உதவுகிறது. ஏனெனில், இதில் வைட்டமின் சி கால்சியம் இரண்டும் நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
சாத்துக்குடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பிற வைரஸ் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
சிறுநீரக ஆரோக்கியம்
சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்களில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி டீடாக்ஸ் செய்யும் ஆற்றல் கொண்டது சாத்துக்குடி.
மேலும் படிக்க | எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்
மன ஆரோக்கியம்
சாத்துக்குடி உட்கொள்வது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை நீக்க உதவுகிறது. இது மனப் பதற்றத்தை நீக்கும் அருமருந்து எனலாம்.
இளைமை
நம்முடைய சருமத்தில் சுருக்கங்களை தராமல் காக்ககூடிய புரதம் கொலாஜன். இளைமையை காக்க, கொலாஜன் புரதம் அவசியம். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இஃநிலையில், வைட்டமின் சி நிறைந்த சாத்துக்குடியை அடிக்கடி சாப்பிடுவதால், முதுமையை விரட்டலாம்.
புற்றுநோய்
சாத்துக்குடியிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் இளமையை காப்பதோடு மட்டுமல்லாமல், லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் சாத்துக்குடியில் உள்ளதால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.
செரிமானம் ஆரோக்கியம்
சாத்துக்குடியில் உள்ள நல்ல அளவு நார்ச்சத்து வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்குகிறது. வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்தவும் சாத்துக்குடி உதவுகிறது.
உடல் பருமன்
சாத்துக்குடி எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது குறைந்த கலோரி உணவாகும். இது வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாக சாத்துகுடி வழக்கமாக சாப்பி வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ