டி20 உலக சாதனை சதம், ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை - உர்வில் படேல் யார்?

Urvil Patel | சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சதமடித்து உலக சாதனை படைத்த ஊர்வில் படேல் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போனார். யார் இந்த இளம் வீரர்?

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 28, 2024, 09:26 AM IST
  • உர்வில் படேல் படைத்த உலகசாதனை
  • 28 பந்துகளில் சதமடித்து கலக்கல்
  • ரிஷப் பந்த் சாதனை முறியடித்துவிட்டார்
டி20 உலக சாதனை சதம், ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை - உர்வில் படேல் யார்? title=

Urvil Patel, IPL Auction 2025 | சையது முஷ்டாக் அலி 20 ஓவர் போட்டியில் 28 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருக்கிறார் குஜராத் பிளேயர் உர்வில் படேல் (Urvil Patel). திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய இவர், 15 பந்துகளில் அரைசதம் அடித்ததுடன் அடுத்த 13 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி20 போட்டியில் மிக குறைந்த பந்துகளில் சதமடித்த பிளேயர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த சாதனை இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் வசம் இருந்தது. அவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் ஹிமாச்சல் அணிக்கு எதிராக 32 பந்துகளில் சதமடித்திருந்தார். இப்போது அந்த சாதனையை உர்வில் படேல் முறியடித்திருக்கிறார்.

உர்வில் படேல் ஐபிஎல் ஏலம்

ஆனால் உர்வில் படேலை எந்த அணியும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை ஏலம் எடுத்திருந்தது. மெகா ஏலத்துக்கு முன்பாக உர்வில் படேல் குஜராத் டைட்டன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அந்த அணி ஏலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்சோல்டு பிளேயராக போனார். ஐபிஎல் ஏலம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே இந்த மெகா சாதனையையும் உர்வில் படேல் படைத்திருக்கிறார். ஐபிஎல் அணிகளில் இருக்கும் பிளேயர்கள் யாரேனும் காயம் காரணமாக விலகினால் இவரை பேக்கப் பிளேயராக அணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இப்போதைய சூழலில் அதிர்ஷ்டத்தையே உர்வில் படேல் எதிர்பார்த்து இருக்கிறார். 

மேலும் படிக்க | 2ஆவது டெஸ்டிலும் இந்த வீரர் விளையாட மாட்டார்... ஆனால் இந்திய அணிக்கு பிரச்னை இல்லை!

உர்வில் படேல் அதிரடி

திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் உர்வில் படேல் மொத்தம் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் விளாசினார். இவரின் அதிரடி பேட்டிங் காரணமாக குஜராத் அணி 156 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்துவிட்டது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த உர்வில் படேல் 35 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். உர்வில் படேலின் இந்த அதிரடி ஆட்டத்துக்குப் பிறகு இப்படியொரு பிளேயரை ஏலத்தில் மிஸ் செய்துவிட்டோமே என நினைக்கும் அளவுக்கு அவர் ஆடியிருக்கிறார். இப்போது அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் பெற்றுவிட்டதால், விரைவில் ஏதேனும் ஒரு ஐபிஎல் அணியில் இணையவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த ஜாக்பாட் எப்போது அடிக்கப்போகிறது என்பது தான் உர்வில் படேலின் எதிர்பார்ப்பு.

ஐபிஎல் ஏலம் முக்கிய அப்டேட்

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதில் ஸ்டார் பிளேயர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜானி பேரிஸ்டோவ் உள்ளிட்ட பிளேயர்களை எந்த அணியும் வாங்கவில்லை. அவர்கள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய நீண்ட நெடிய அனுபவம் வைத்திருந்தாலும் அண்மைக்காலமாக மோசமாக விளையடி வருவதால் வார்னர் உள்ளிட்ட பிளேயர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.

மேலும் படிக்க | சிஎஸ்கே மேட்சுக்கு அம்பயர் செட்டிங் செய்த சீனிவாசன் - லலித் மோடி பகீர் குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News