அடிவயிறு தொப்பை அடியோடு கரைய... இந்த 3 வித்தியாசமான உணவுகள் உதவும்!

Health Tips: அடிவயிறு தொப்பை கொழுப்பை அடியோடு கரைக்க உதவும் இந்த 3 வித்தியாசமான உணவுகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 11, 2025, 12:04 AM IST
  • உடல் பருமன் தற்போது பெரிய பிரச்னையாக இருக்கிறது.
  • இதில் உணவுப் பழக்கவழக்கம் மிகவும் அவசியமானது.
  • உடல் எடையை குறைக்க சமச்சீரான ஊட்டச்சத்துக்கள் தேவை.
அடிவயிறு தொப்பை அடியோடு கரைய... இந்த 3 வித்தியாசமான உணவுகள் உதவும்! title=

Health Tips, Unique Foods To Reduce Belly Fat: உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க தற்போது பலரும் சிரத்தை எடுத்து பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். கட்டுப்பாடான உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றுதல், தினமும் காலையிலோ, மாலையிலோ, இரவிலோ உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது, இன்னும் சிலர் ஓட்டப் பயிற்சி, நடைப் பயிற்சி என தங்களது உடல் இயக்கத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகின்றனர்.

நோய்கள் தங்களை அண்டாமல் இருக்கவும், மருத்துவமனை படிக்கட்டுகளை தேவையின்றி ஏற வேண்டாம் என்ற எண்ணத்துடன் பலர் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர் தங்களை இளமையான தோற்றத்திலேயே வைத்திருக்கவும் இவைகளை செய்வார்கள். அதாவது, உடல் பருமன் இருந்தால் தங்களை ஃபிட்டாக வைத்திருக்க இத்தனையையும் செய்கிறார்கள். காரணம், இன்று உடல் பருமன் என்பது பொதுவான உடல்நிலை பிரச்னையாகிவிட்டது.

3 வித்தியாசமான உணவுகள்

தற்போதைய வாழ்க்கை முறையின்படி அதிக நேரம் உட்கார்ந்தே வேலைப் பார்ப்பது, துரித உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில், உடல் பருமன் பிரச்னையை போக்க, அடிவயிறு தொப்பை கொழுப்பை கரைக்க உடற்பயிற்சிகள், யோகா, மற்றும் கட்டுப்பாடான உணவுப் பழக்கவழக்கம் மட்டுமின்றி ஊட்டச்சத்து நிறைந்த சில உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியமாகிறது.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வேகமாய் குறைக்க பாலுடன் இந்த மேஜிக் மசாலாவை சேர்த்து குடித்தால் போதும்

இதனால், சமச்சீரான ஊட்டச்சத்து உங்களுக்கு கிடைக்கும். அடிவயிறு தொப்பை கொழுப்பு குறைந்து உடல் பருமன் பிரச்னைக்கும் நீங்கள் தீர்வு காணலாம். அந்த வகையில், சில உணவுப்பொருள்களை கலந்து சாப்பிடுவதன் மூலமும் அடிவயிறு தொப்பையை நீங்கள் கரைக்கலாம். அந்த வகையில் அந்த 3 வித்தியாசமான உணவுகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

கீரை, பச்சை பயிறு

பச்சை பயிறில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. இதனால், செரிமானம் சீராகவும், வளர்சிதை மாற்றத்தை வேகமாகவும் இருக்கும். இதன் குறைந்த கலோரி, உடல் எடையை குறைக்க உதவும். கீரையில் ஆக்ஸிஜனேற்றிகள், இரும்புச்சத்து ஆகியவை ஆற்றலை அதிகரிக்க உதவும். எனவே, இவை இரண்டையும் நீங்கள் சேர்த்து உண்டால், அடிவயிறு தொப்பை கொழுப்பை கரைக்க உதவும்.

எலுமிச்சை பிளஸ் கிரீன் டீ

கிரீன் டீயில் இருக்கும் கேட்டசின்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். இவை தொப்பை கொழுப்பை கரைக்க உதவும். அதே நேரத்தில் எலுமிச்சையின் சிட்ரஸ் சுவை செரிமானத்தை மேம்படுத்தும். உடலின் நச்சுகளை வெளியேற்றவும் உதவும். இவற்றை நீங்கள் சேர்த்து சாப்பிட்டால் அடிவயிறு தொப்பை கொழுப்பு கரைவது மட்டுமின்றி அதிக ஆற்றலையும் பெறலாம்.

காபி பிளஸ் இலவங்கப்பட்டை

காபியின் காஃபின் உங்களுக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்க உதவும். மேலும், அது வளர்சிதை மாற்றத்தை தீவிரமாக்கும். அதேபோல், இலவங்கப்பட்டையின் தெர்மோஜெனிக் பண்புகள் கொழுப்பை கரைக்க உதவும். இவற்றை சேர்த்து சாப்பிட்டால் அடிவயிறு தொப்பை குறையும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | கொழுப்பை கரைத்து... இஞ்சி இடுப்பழகை பெற உதவும்... சில அற்புத ஆயுர்வேத மூலிகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News