ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் போட்ட முக்கிய கண்டிஷன்..!

Erode Election | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன் போட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 12, 2025, 07:43 AM IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
  • தேர்தல் ஆணையம் போட்ட முக்கிய கண்டிஷன்
  • தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் போட்ட முக்கிய கண்டிஷன்..! title=

Erode, Election Commission | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வேறு கட்சிகளை சேர்ந்த நட்சத்திர தலைவர்கள் பிரச்சாரம் செய்தால், அவர்களுக்கான செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தேர்தல் செலவீனங்களில் இருந்து விலக்கு கோர முடியாது என அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்கிறது. அந்த தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது. 

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் மாரடைப்பால் காலமானதால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இருப்பினும் அவரும் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி இயற்கை எய்தினார். இப்போது காலியாக இருக்கும் இந்த தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் போட்டியிடுவதில் இருந்து காங்கிரஸ் பின்வாங்கி கொண்டது. இதனால் திமுக சார்பில் அந்த தொகுதியில் ஏற்கனவே ஒருமுறை எம்எல்ஏவாக இருந்த வி.சி.சந்திரக்குமார் போட்டியிடுகிறார். 

மேலும் படிக்க | தந்தை பெரியார் வழியில் முக ஸ்டாலின் செயல்படுகிறார் - ஆ ராசா பேச்சு!

இந்த தொகுதிக்கான வேட்புமனுதாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் தேமுதிக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. இதனால் திமுக எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வேறுகட்சி நட்சத்திர பேச்சாளர்கள் தலைவர்கள் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால், அவை வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தலைமை தேர்தல் அதிகாரி தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். 

தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்தத் தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 98.ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை 10.01.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தெரிவித்து இந்தியத் தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 17.01.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு - அதிமுக புறக்கணிப்பு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News