Lung exercise, Health Tips Tamil : இந்தியா மட்டுமல்ல உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்று ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தது. நுரையீரல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருமளவு ஏற்பட்டது. சுவாச பயிற்சிகள் மூலம் நுரையீரல் பாதுகாப்பை மேம்படுத்த முடியும். மார்பு பிசியோதெரபி எனக் கூறப்படும் இந்த எளிமையான பயிற்சிகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
உதரவிதான பயிற்சி
(Diaphragmatic breathing)
உதரவிதானப் பயிற்சி என்பது அடிவயிறு சுவாசப் பயிற்சி எனவும் கூறப்படுகிறது. வயிற்றை முழுமையாக ஈடுபடுத்தி இந்த சுவாசப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, அடிவயிறு தசைகள், வயிறு மற்றும் உதரவிதானம் மூன்றின் வழியாக முழுமையான சுவாச பயிற்சி செய்யப்படுகிறது. உதரவிதானப் பயிற்சியானது இதயத்துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
செய்முறை
தரையில் அல்லது படுக்கை மீது ரிலாக்ஷாக படுத்துக்கொள்ள வேண்டும். தலை மற்றும் முழங்காலுக்கு அடியில் தலையணை வைத்துக்கொள்ளுங்கள். தோள்பட்டையை ரிலாக்ஷாக்கிக் கொள்ளுங்கள். ஒரு கையை தொப்புள் மீதும், மற்றொரு கையை மார்பு மீதும் வைத்துக் கொண்டு, மூக்கு வழியாக 2 நொடிகள் காற்றை உள்ளிழுக்க வேண்டும். காற்று அடிவயிறுக்கு செல்வதை உன்னிப்பாக கவனித்து, பின்னர் மெதுவாக வாய்வழியாக விட வேண்டும்.
உதடு சுவாசம்
உதட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் சுவாசப் பயிற்சியின் மூலம் நுரையீரலில் தேங்கியிருக்கும் காற்றை வெளியேற்ற முடியும். முதலில் மூக்கின் வழியே மெதுவாக காற்றை உள்ளிழுத்து, உதடுகளை குவித்து மெதுவாக அந்த காற்றை வெளியேற்ற வேண்டும். சுவாசிக்கும் தன்மை குறைபடும்போது, நுரையீரலில் தேங்கியிருக்கும் காற்றானது உதடு வழியாக வெளியேறும். புதிய காற்று நுரையீரலுக்குள் செல்லும்.
செய்முறை
விசாலமான இடத்தில் தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகுப்பகுதி நேராக இருக்க வேண்டும். கைகள் இரண்டையும் தொடை மீது வைத்துக்கொள்ளுங்கள். ஒன்று, இரண்டு என எண்ணிக்கொண்டு காற்றை மெதுவாக மூக்கின் வழியாக உள்ளிழுக்க வேண்டும். பின்னர், அந்தக் காற்றை 4 முதல் 6 நொடிகளில் உதடுகள் வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்
ACBT சுவாசப் பயிற்சி
ACBT(Active cycle of breathing technique) சுவாசப் பயிற்சி மூலம் 3 கட்டங்களாக நுரையீரலில் தேங்கியிருக்கும் சளிக்கோழையை வெளியேற்றி, ஆரோக்கியமான சுவாசத்தை மேற்கொள்ள முடியும்.
முதலாவதாக, காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து, இரு கைகளையும் அடிவயிற்றில் வைத்துக்கொள்ள வேண்டும். 3 நொடிகள் காற்றை உள்ளிழுத்து, 4 நொடிகள் அதை கட்டுப்படுத்தி வைத்திருந்து, 5 நொடிகளில் மெதுவாக வெளியேற்ற வேண்டும். இரண்டாவதாக, காற்றை வாய்வழியாக உள்ளிழுத்து, மூக்கு வழியாக வெளியேற்ற வேண்டும். ஏற்கனவே கூறிய நொடிகளை பின்பற்றிக்கொள்ளுங்கள். மூன்றாவது மற்றும் கடைசியாக பாதி வாயை திறந்து, ஆழமான சுவாசத்தை 2,3 நொடிகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர், உள்ளிழுத்த காற்றை வாய்வழியாகவே வேகமாக வெளியேற்ற வேண்டும்
பலூன் ஊதும் பயிற்சி
பலூன் ஊதுவது மூலம் நுரையீரல் மற்றும் சுவாசம், நுரையீரல் தசைகள் மேம்படும். இந்த பயற்சி பெரும்பாலும் அனைவரும் ஏற்கனவே செய்திருக்ககூடிய ஒன்றுதான். எளிமையானதும் கூட. மூக்கின் வழியாக ஆழமான சுவாசம் மேற்கொள்ள வேண்டும். அந்தக் காற்றை பலூனுக்கு வாய்வழியாக வெளியேற்ற வேண்டும்.
ஸ்ட்ரா பயிற்சி
எளிமையாக செய்யக்கூடிய ஸ்ட்ரா பயிற்சி, நுரையீரலின் செயல்பாட்டையும், சுவாச தட்டுப்பாடுகளையும் போக்கக்கூடியது. இந்த பயிற்சிக்கு ஒரு ஸ்ட்ரா மற்றும் அரை டம்ளர் தண்ணீர் மட்டும் இருந்தால் போதும். மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுத்து, தண்ணீருக்குள் இருக்கும் ஸ்ட்ராவில் காற்றை வாய் வழியாக வெளியேற்றுங்கள். தண்ணீரில் எழும் குமிழ்கள் பெரிதாக வரும் வரை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
ஸ்பைரோமீட்டர் பயிற்சி
ஸ்பைரோமீட்டர் மூலம் மேற்கொள்ளப்படும் சுவாசப் பயிற்சி நுரையீரலை மேம்படுத்தி, நிமோனியா ஏற்படுத்தும் ஆசிட் உருவாதை கட்டுப்படுத்துகிறது. படுக்கை அல்லது நாற்காலியில் ரிலாக்ஷாக அமர்ந்து கொள்ள வேண்டும். ஸ்பைரோமீட்டரை வாயில் டைட்டாக வைத்துக்கொள்ளுங்கள். கோப்பைக்குள் இருந்து பந்தை, மேலே கொண்டு வர உங்களால் முடிந்த அளவு காற்றை ஊதுங்கள். அதிகபட்சமாக 12 முறைக்கு மேல் செய்ய வேண்டாம். சுவாச இழப்பு ஏற்பட்டுவிடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் மசாலா நீர்: குடிச்சு பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ