இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு 8:30 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் இன்று இரவு 10:15 மணிக்கு புறப்படும்.
Special Train Rescheduled @DrmChennai @SalemDRM pic.twitter.com/cPg2JXHFZ4
கோவை - ராமேசுவரம் இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:-
Special Trains @SalemDRM @propgt14 @drmmadurai pic.twitter.com/EyKlOBQ6DP
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ரயிலில் உள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்:-
இந்த புல்லட் ரயில் மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் செல்லும்.
அகமதாபாத் - மும்பை இடையே 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே துவக்கி வைத்தனர்.
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைப்பெற்றது..
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் நாளை காலை 7.15 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதமாக வருவதால் மும்பை மெயில் 7 மணி 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
ஒவ்வொரு வருடம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பழமையை நினைவுகூரும் வகையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் பாரம்பரிய ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் வருடந்தோறும் இத்தகைய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று தவிர்க்க முடியாத காரணங்களால் பாரம்பரிய ரயில் இயக்கப்படவில்லை. இதனால் இஐஆர்-21 ரயில் என்ஜினுடன் கூடிய ரயிலை செப்டம்பர் 10 இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
உலகிலேயே தற்போது இயங்கிக்கொண்டு இருக்கும் பழமையான ரயில் என்ஜின்களில் ஒன்று இதுவாகும்.
ரக்ஷா பந்தன் பண்டிகை நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் கையில் ராக்கி கட்டி விடுவார்கள்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் என்பவர் தனது சகோதரி உடன் ரக்ஷா பந்தன் கொண்டாட நேற்று ஹரியானா மாநிலம் சென்றுள்ளார். இதையடுத்து, இரவு பானிபட் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ரயிலானது ஒரு ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-வது நடைமேடையில் விபத்து கால மீட்பு பணிக்கு செல்லும் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று பிற்பகல் திடீரென தீப்பிடித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறிது நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
பின்னர், அந்த பெட்டியில் இருந்த பொருட்களை வெளியே எடுத்தனர். அந்த பெட்டியில் உள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
மின்கம்பி அறுந்துவிழுந்ததால் ரயில் பெட்டியில் தீப்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி பலியாகினர்.
தஞ்சாவூரை அடுத்த ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். பணியை முடித்து விட்டு சென்ற வினோத் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்று போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் வினோத் மீது மோதி மரணம் அடைந்தார்.
இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் 2 நாளில் மட்டும் 22 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை தற்போது #YouTube இல் வைரலாகி வருகிறது. ரயில் பாதையில் விழுந்த பெண் தண்டவாளத்திற்கு இடையே படுத்து கொண்டார். சரக்கு ரயில் கடந்து செல்லும் வரை அந்த பெண் அப்படியே இருந்தார். பிறகு அந்த பெண் உயிருடன் மீட்டகப் பட்டார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த பெண் கருப்பு உடை அணிந்திருந்தார். இந்த வீடியோ பிப்., 21-ம் தேதி எடுக்கப் பட்டது.
வைரல் வீடியோ:-
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பயணிகள் ரயில் ஒன்று, சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
டெல்லியில் இருந்து புறப்பட்ட கலிண்டி எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலம், தண்ட்லா ஜங்ஷன் அருகே வந்தபோது, எதிரே சரக்கு ரயில் ஒன்றும் வந்துள்ளது.
ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்களும் நேருக்கு நேர் வந்தது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ரயில் டிரைவர்கள் போராடி, ரயில்களை நிறுத்தினர்.
நள்ளிரவில் நிகழ்ந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சில மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில் புறப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்படும் முதல் பட்டியலுக்குப் பிறகு முன்பதிவு பிரிவில் காலியாக உள்ள இடத்துக்கு டிக்கெட் எடுப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சலுகை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தைவான் தலைநகர் தைபேயில் சாங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரெயில் நின்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 6 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.