தெற்கு ஆப்பிரிக்கா கலவர அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை.
தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ் கற்பிக்காத பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.
தென்பெண்ணை ஆற்று விவகாரத்திலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது கண்டனத்திற்கு உரியது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி தெரியும், தி பேமிலி மேன்-2 இந்தி சீரியல் எதிர்ப்பு போராட்டம் ஏன் என்ற கேள்வி எழுகிறதா? உண்மையான காரணம் என்ன தெரியுமா?
தமிழகத்திற்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகிவிட்டது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நீண்ட காலமாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
இனி ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்: வைகோ அறிக்கை.
சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும். ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும்.
இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும் என வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.
கூட்டணியின் ஒரு பகுதியாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மதிமுக-வுக்கு சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவனல்லூர், மதுராந்தகம் மற்றும் அரியலூர் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக செத்துப்போன சமஸ்கிருத (Sanskrit) மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது: வைகோ கண்டனம்.
தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் "இனிய நாள்" என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்
இந்தி மொழியில் இருந்த இரங்கல் கடிதத்தை அமித் ஷாவுக்கு திருப்பி அனுப்புமாறு தமிழக முதல்வர் (Edappadi K. Palaniswami) பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டு உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.