ரஷ்யா நாட்டிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க புடின் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 755 ஆக உள்ள தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை 455 ஆக குறைக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் உள்ள தூதரகத்தில் எத்தனை அமெரிக்கர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறித்து அமெரிக்கா எந்த தகவலும் வெளியிடாத நிலையில், ரஷ்ய சேனல் ஒன்று, அமெரிக்க தூதரகத்தில் 1200 பேர் பணியாற்றி வருவதாகவும், தற்போது ரஷ்ய அரசின் உத்தரவால் 745 பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.