வீர தீர சூரன் பார்ட் 2 ரிலீஸ் தேதி இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2025, 09:46 AM IST
  • சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2'.
  • படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.
  • மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது.
வீர தீர சூரன் பார்ட் 2 ரிலீஸ் தேதி இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! title=

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ‌. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது!

ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ்-  டீசர் - ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீயான் விக்ரம் - இயக்குநர் அருண்குமார் - தயாரிப்பாளர் ரியா ஷிபு கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாலும், முதலில் 'வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்து இருந்தனர். பின்னர் விடாமுயற்சி வெளியாகும் என்பதால் பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர். ஆனால் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய விடாமுயற்சி பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகிறது. இதனால் தற்போது வேறு வழியின்றி மார்ச் 27ம் தேதிக்கு தள்ளி போகி உள்ளனர்.

மேலும் படிக்க | ஓவியா to த்ரிஷா..வீடியோ லீக் சர்ச்சையில் சிக்கிய தமிழ் நாயகிகள்! லிஸ்ட் பெருசு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News