Budget 2025 Latest News: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்கிறார். வருமான வரி சட்டத்தில் பெருமளவு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
Nirmala Sitharaman Latest News: மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2025 பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான 3 முக்கிய அம்சங்கள் இடம் பெறப்போவதாக தகவல். அதுக்குறித்து பார்ப்போம்.
மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2025 பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான 3 முக்கிய அம்சங்கள் இடம் பெறப்போவதாக தகவல். அதுக்குறித்து பார்ப்போம்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பாரம்பரிய முறைப்படி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இரு சபைகளின் ஜாயிண்ட் பார்லிமென்டரி குழு கூட்டத்திலே உரையாற்றுவார். அதன்பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், முக்கியமாக வருமான வரி தொடர்பான மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதவாது தற்போது வருமான வரி தொடர்பாக மத்திய நிதி அமைச்சரிடம் இருந்து சில பரிந்துரை செய்யப்பட்டு, அந்த கோப்புகள் தற்பொழுது பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அந்த கோப்புகள் குறித்து பிரதமர் ஆலோசனை செய்த பிறகு, ஒப்புதல் கொடுத்து விட்டால் என்றால், நிச்சயமாக இது வருமான வரி செலுத்தும் நடுத்தர மக்கள் உயர்தர வரிவாய் பிரிவினருக்கு முக்கிய அறிவிப்பாக வருகின்ற பட்ஜெட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நிச்சயமாக பிரதமர் மோடி ஒப்புதல் கொடுப்பார் என்றும் நிதி அமைச்சர் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
அந்த மூன்று முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்த்தால் முதலாவது அம்சமாக புதிய வருமான வரித்திட்டம். புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு ஸ்டாண்டர்ட் டிடக்சன் எனும் நிலையான கழிவின் வரம்பு மாற்றப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு நிலையான விலக்கு வரம்பு ரூ.50000 லிருந்து ரூ.75000 ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது அது ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட இருக்கிறது. அப்படி உயர்த்தினால், இந்த லட்சம் ரூபாய் தவிர்த்து தான், மற்றவை வருமான வரி வரம்புக்குள் வரும். அதாவது ரூ. 7 லட்சம் மற்றும் ரூ.8 லட்சத்திற்குள்ள ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும். எனவே புதிய வருமான வரி திட்டத்தில் நிலையான விலக்கு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அடுத்ததாக ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை உள்ளவர்கள் தற்போது 20% வரியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் உள்ளவர்கள் அனைவருமே 30% வரியை செலுத்தி வருகிறார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் 30% வரியை செலுத்தி வருகிறார்கள்.
தற்போது ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் என்பது சுமார் 40 சதவீத பேர் மட்டுமே பெற்று வருகிறார்கள். அவர்கள் எல்லாம் கடும் பாதிப்பு உள்ளாகி உள்ளார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில், ரூ.12 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்.
அதாவது தற்போது 20% வரி விதிக்கப்படும் ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை இருப்பதை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட இருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ரூ.20 லட்சத்திற்கு மேல் இருந்தால் தான் 30% வரி விதிக்கப்படும் எனத் தகவல். இது பெரும்பாலோருக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். அதாவது ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும்.
அது மட்டுமல்ல மூன்றாவதாக மிக முக்கியமானது. 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்த 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரி சட்டம் பெரிய அளவிலே திருத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது தற்பொழுது உள்ள பழைய வருமான வரி சட்டத்திலே கிட்டத்தட்ட 298 பிரிவுகள் மற்றும் 23 அத்தியாயங்கள் இருக்கின்றன. இதில் 60 சதவீதம் குறைக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
அதாவது 298 பிரிவுகள் என்பது 120 ஆக குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் வருமான வரி சட்டத்தில் பெருமளவு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கடந்த 61 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கும் சட்டங்கள் திருத்தப்பட்டு, அதற்கான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.