தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ பி டிவில்லியர்ஸ். விதியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான் அவரை ரசிக்க வைக்கிறது. அதேபோல் ஒருவர் அடிக்கும் பந்து மைதானத்தின் அனைத்து இடங்களில் செல்லும் என்றால் அது டிவில்லியர்ஸ்தான். இவரை செல்லமாக 360 என்றும் அழைக்கப்படுகிறார்.
இப்படி கிரிக்கெட்டில் கால்பதித்த நாள் முதல் தனக்கென ஒரு தனி சாம்ராஜியத்தையே உருவாக்கிய இவர் பார்வை குறைபாடு காரணமாக விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் கிரிக்கெட் குறித்து பேசி வருகிறார். அவ்வபோது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக பேசி உள்ளார் டி வில்லியர்ஸ். அதில், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடலாம் என்று நினைக்கிறேன். உறுதியாக இல்லை. ஆனால் நான் அதை உணர ஆரம்பித்துவிட்டேன்.
மேலும் படிங்க: IND vs ENG: வாஷிங்டன் சுந்தர் இல்லை! இவருக்கு தான் வாய்ப்பு! இந்தியாவின் பிளேயிங் 11!
எனது குழந்தைகள் எனக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுகிறார்கள். அவர்களுடன் வலைப்பயிற்சிக்கு செல்லலாம் என நினைக்கிறேன். என்னுடைய கண்கள் இப்போது நன்றாக உள்ளன. அதனால் நான் களத்திற்கு சென்று பந்துகளை எதிர்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உள்ளூர் போட்டிகள் விளையாடுவாரா அல்லது சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார் ஏ பி டிவில்லியர்ஸ். இதுவரை அவர் 114 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள், 46 அரை சதங்கள் உட்பட 8,765 ரன்கள் விளாசியுள்ளார்.
அதேபோல் 228 ஒருநாள் போட்டிகளில் 25 சதங்களும் 53 அரைசதங்களும் அடித்த அவர் 9,577 ரன்களை குவித்தார். இவை இரண்டிலுமே 50க்கும் மேல் சராசரியை கொண்டுள்ளார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 78 போட்டிகளில் 1,672 ரன்களை அடித்துள்ளார்.
ஐபிஎல்லில் இவர் டெல்லி அணியிலும் பெங்களூர் அணியிலும் பயணித்துள்ளார். தொடக்கத்தில் டெல்லியில் விளையாடினாலும் இவர் 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை பெங்களூர் அணியில் விளையாடி உள்ளார். 184 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 40 அரை சதங்களை விளாசி 5,162 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன? - சீமான் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ