டோக்கியோ: டோக்கியோவில் ஜோக்கர் ஒருவர் ரயிலில் பயணித்தவர்களை கத்தியால் குத்தியதால் மக்கள் நிலைகுலைந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் மக்கள் தொகை அதிகம் கூடும் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்று உள்ளது.இங்கு கியோவில் இருந்து ஷின்ஜூகு வரை செல்லும் ரயிலில்,பயணிக்க அதிகளவில் பயணிகள் கூடுவார்கள். இந்நிலையில்,நேற்று ரயிலில் பயணம் செய்ய ஏராளமான பயணியர்கள் குழுமியிருந்தனர். அந்த சமயம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு நபர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதாவது அந்த நபர் ஜோக்கர் போல உடையணிந்து வந்தது தான் அந்த கவன ஈர்ப்பிற்கு காரணம். வித்தை காட்ட போகிறார் என நினைத்திருந்த மக்களுக்கு அவர் காட்டிய வித்தையே வேறு. ரசிக்கும்படியான வித்தையல்ல அது,அனைவரும் அதிரும்படியான வித்தை. அப்படி அந்த நபர் என்ன செய்திருக்கிறார் என்றால் தனது உடையில் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென்று எடுத்து,ரயிலில் பயணம் செய்த பயணியர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கினார். இந்த திடீர் தாக்குதலில்,பயணியர்கள் 10 பேர் பலமாக காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து நிலைகுலைந்து சட்டென்று மயங்கி விழுந்தார். அதுமட்டுமல்லாது அந்த ஜோக்கர் ரயில் பெட்டிகளுக்கும் தீ வைத்து விட்டார்.
A man dressed in Batman’s Joker costume was arrested after he attacked and injured 17 passengers on a Tokyo train line as many partygoers headed into the city center for Halloween celebrations https://t.co/CR9J5sM6eY pic.twitter.com/Xv3hWxcntp
— Reuters (@Reuters) October 31, 2021
இதனையடுத்து பயணிகள் பயந்து அலறியடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடினர். இதன் காரணமாக ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வளவையும் செய்த அந்த ஜோக்கர் ரத்தம் சொட்ட சொட்ட இருந்து அந்த கத்தியை எடுத்துக்கொண்டு கெத்தாக ரயில் நிலையத்தில் எவ்வித அச்சமுமின்றி நடந்து சென்றார். போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, உடனே அந்த சைக்கோ ஜோக்கரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இவரை கைது செய்த போலீசார் எதற்காக இவ்வாறு செய்தார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டைனோசர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR