இதுவரை வரலாறு காணாத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் மிரட்டல்களைக் கேட்டுக்கொண்டு அமெரிக்கா அமைதியாக இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2018, 02:54 PM IST
இதுவரை வரலாறு காணாத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும்- ட்ரம்ப் எச்சரிக்கை title=

ஈரான் தன்னுடைய அணு ஆயுத ஒப்பந்தக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியதை அடுத்து அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது மட்டுமில்லாமல், தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் கூறியுள்ளது. ஈரானுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், நேற்று ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய ஈரான் அதிபர், அரசியலை உண்மையில் புரிந்து கொள்ளும் யாரும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்க மாட்டார்கள். எங்களுக்கு பல நெருக்கடிகள் தரப்படுகிறது. 

மிஸ்டர் ட்ரம்ப், நாங்கள் உண்மையானவர்கள் எங்கள் பிராந்தியத்தின் நீர்வழிகளை பாதுகாக்க யார் உத்தரவிட வேண்டும்? வரலாற்றுக்கு தெரியும். தேவையில்லாமல் "சிங்கத்தின் வாலை பிடித்து விளையாட வேண்டாம். அது உங்களை வருத்தப்பட வைக்கும் எனக் கூறியிருந்தார். 

ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி கருத்து பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, 

 

 

ஒருபோதும், எப்போதும் அமெரிக்கா யாரை அச்சுறுத்தியது இல்லை. மீண்டும் மீண்டும் ஈரானின் மிரட்டல்களைக் கேட்டுக்கொண்டு அமெரிக்கா அமைதியாக இருக்காது. இதுவரை வரலாறு காணாத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். எனவே பாதுகாப்பாக இருங்கள் என்று அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Trending News