நியூயார்க்: கெனான் பனிப் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 8 முதல் 12 அங்குலம் அளவிற்கு பனிப்பொழிவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை சேவையின் முன்னறிவிப்பை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி சஃபோல்க் மற்றும் நாசாவ் மாவட்டங்கள் 7 முதல் 11 அங்குலம் அளவிலான பனிப்பொழிவுடன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 5 முதல் 12 அங்குலம் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன என்று நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் சனிக்கிழமை நண்பகல் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நியூயார்க் நகரம் இதுவரை 4 அங்குல பனிப்பொழிவை பதிவு செய்துள்ளது. பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக மேலும் 4-7 அங்குலங்கள் பனி பொழிவு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஹொச்சுல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து அவசரகால நிலையை அறிவிக்கபப்ட்டது.
ALSO READ | Video: இசைக்கருவியை எரித்து தாலிபான் அட்டூழியம்; கண்ணீர் சிந்தும் இசைக் கலைஞர்!
ஜான் F. கென்னடி சர்வதேச விமான நிலையம், லாகார்டியா விமான நிலையம் மற்றும் மத்திய பூங்கா ஆகிய இடங்களில் கடந்த 12 மணி நேரத்தில். பனிப்பொழிவு 5 அங்குலத்தைத் தாண்டியதாக தேசிய வானிலை சேவை சனிக்கிழமை காலை 9 மணிக்கு ட்வீட் செய்து தெரிவித்துள்ளது.
ஜான் F. கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயங்கும் விமானங்களில் 90 சதவீத விமானங்களும், லாகார்டியா விமான நிலையத்திலிருந்து இயங்கும் விமானங்களில் 97 சதவீத விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அதாவது முறையே 322 மற்றும் 279 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
"பனி பொழிவு மிக அதிக அளவு இருப்பதன் காரணமாக, சாலைகள் மிகவும் வழுக்கும் நிலையில் இருப்பதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு நியூயார்க் மக்களுக்கு, நியூயார்க் நகர அவசர மேலாண்மை அதன் சமூக ஊடக கணக்கின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க் நகர வாசிகள் பயணம் செய்ய வேண்டியிருந்தால் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும், நியூயார்க் நகரில் படகு சேவை மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
லாங் ஐலேண்டில் உள்ள சஃபோல்க் கவுண்டி மற்றும் கனெக்டிகட்டின் நியூ லண்டன் கவுண்டியில் மணிக்கு 60 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் பனிப்புயல் எச்சரிக்கை அமலில் உள்ளது என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
ALSO READ | பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாச்சாரத்தின் அம்சம்: இம்ரான் கான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR