Russian President Putin Speech:ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அந்நாட்டு மக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார், இந்த கோரிக்கை அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது எனலாம். வன்முறை சூழ்ந்த ரஷ்யாவின், புதினின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
கடந்த வியாழக்கிழமை (பிப். 29) அன்று ரஷ்ய நாட்டுகளிடம், அந்நாட்டு அதிபரான புதின் உரையாற்றி உள்ளார். அந்த உரையில் ரஷ்யா - உக்ரைன் விவகாரம் குறித்தும் அதிகம் பேசியிருக்கிறார். குறிப்பாக, ரஷ்ய நாட்டின் அணுஉலைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், உக்ரைன் நாட்டுக்கும் ஆதரவு வழங்கும் வகையிலும் செயல்படும் NATO நாடுகளுக்கு புதின் கடும் எச்சரிக்கையும் விடுத்தார்.
அழியும் குடும்ப கட்டமைப்பு...
அரசியல் விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, ரஷ்ய மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை சார்ந்த சில விஷயங்கள் குறித்தும் புதின் அந்த உரையில் பகிர்ந்துகொண்டார். ரஷ்யர்களின் வாழ்வு மேம்படும் என வாக்குறுதி அளித்த புதின், மக்கள் தங்கள் குடும்பங்களில் அதிக குழந்தைகளை பெற முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசினார்.
மேலும் படிக்க | 7 ஆண்டுகளுக்கு பின் கடத்தப்பட்ட பெண்...? போலீசார் இப்போது கண்டுபிடித்தது எப்படி?
"குடும்பத்தின் முக்கிய நோக்கம் குழந்தைகளைப் பெறுவது, இனப்பெருக்கம் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பல இனங்களைக் கொண்ட நமது தேசத்தின் உயிரோட்டத்தை உறுதி செய்வதுதான். ஒழுக்கம் சார்ந்த விழிமியங்களும், குடும்ப கட்டமைப்பும் வேண்டுமென்றே அழிக்கப்பட்டு, சீரழிவு நிலைக்கு தள்ளப்பட்ட சில நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
குழந்தைகளை பெற்றால் வரி சலுகை
மனித நாகரிகம் நிலைநிறுத்தப்படும் பாரம்பரிய விழுமியங்களின் கோட்டையாக ரஷ்யா இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் கோடிக்ககணக்கானோர் மட்டுமின்றி உலகின் பல பிரதேசங்களில் வாழும் மக்களால் நமது கலாச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குழந்தைகளை கொண்டு குடும்பங்களுக்கான ஆதரவு என்பது தார்மீக ரீதியான தேர்வு. பல குழந்தைகளை கொண்ட குடும்பம் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி அரசின் முக்கிய வியூகமாகவும், அடிப்படை சமூகத் தத்துவமாகவும் அது உருமாற வேண்டும்" என்றார்.
இதுமட்டுமின்றி, பல குழந்தைகளை பெற்றுக்கொள்வோரை ஊக்குவிக்க பல புதிய திட்டங்களையும் புதின் அறிவித்தார். பல குழந்தைகளை பெறுவோருக்கு பொருளாதார ரீதியான சலுகைகளை இந்த திட்டங்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளனர். பணம் மட்டுமின்றி ஒருவர் 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்போது வரிவிலக்கையும் இரட்டிப்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விளையாட்டின் முக்கியத்துவத்தை அவர் உணர்த்தினார். " நாட்டின் முக்கிய சாதனைகளில் ஒன்று நமது விளையாட்டு. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நிலையான உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரி விலக்குகளை அரசு வழங்கும்" என்று அதிபர் புதின் அறிவித்தார். இவை மட்டுமின்றி, மது குடிக்கும் பழக்கத்தையும் குறைந்துக்கொள்ளும்படி அதிபர் புதின் கோரிக்கை வைத்தார். அதாவது உடல்நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும்படி அவர் கோரினார்.
மேலும் படிக்க | அபுதாபி இந்து கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.. ஆனால் சில விதிமுறைகள் உண்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ