லாகூர்: பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் பெரும் பீதியில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்காக அவர்களது குடியிருப்பு, தொடர்பு எண் மற்றும் பிற தகவல்களை உள்ளூர் காவல்துறையினருக்கு வழங்குமாறு அவர்களிடம் கூறப்பட்டதை அடுத்து இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
சீக்கியர்களின் முதல் மத குருவான குரு நானக் தேவின் பிறந்த இடமான லாகூரில் உள்ள நாங்கனா சாஹிப்பில் உள்ள சீக்கியர்கள் தங்கள் தகவல்களை பாகிஸ்தானின் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தில் (ETPB) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்று ஜீ மீடியாவுக்கு கிடைத்துள்ள ஆடியோ செய்தி மூலம் தெரிய வந்துள்ளது.
இதை உறுதிசெய்து, லாகூரின் குருத்வாரா குரு ராம்தாஸ் ஜியின் கிரந்தி ரஞ்சித் சிங், சீக்கியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இரவில் வெகு நேரம் வரை வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டாம் என்றும் எச்சரித்து வாய்ஸ் மெசேஜை அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எஸ்.ஜி.பி.சி யின் முன்னாள் உறுப்பினர் மனிந்தர் சிங்கும் ரஞ்சித் சிங்கின் கருத்தை ஒத்திசைக்கும் வகையில், சீக்கியர்கள் (Sikhs) எச்சரிக்கையுடன் இருக்குமாறு மற்றொரு செய்தி மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குருத்வாரா தேரா சாஹிப்பில் தினசரி மாலை தொழுகைக்குப் பிறகு, ETPB அதிகாரிகளால் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. லாகூர் மற்றும் நங்கனா சாஹிப்பில் வசிக்கும் சீக்கியர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதால், அவர்களது பாதுகாப்புக்காக அவர்கள் குடியிருப்பு முகவரி, தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.” என்று ரஞ்சித் சிங் ஆடியோ செய்தியில் கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாகியது.
ALSO READ: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துக்கள் ஏலம்; காரணம் என்ன
சீக்கியர்கள் பீதியடைய வேண்டாம் என்றும், தங்கள் ஆவணங்களை பாகிஸ்தான் (Pakistan) சீக்கிய குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (பி.எஸ்.ஜி.பி.சி), ஈ.டி.பி.பி அல்லது குருத்வாரா தேரா சாஹிப்பின் பராமரிப்பாளரான முஹம்மது அசாரிடம் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பல சீக்கியர்கள் தங்களுக்கு தொடர்புடைய ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்ததை உறுதிப்படுத்திய ஒரு லாகூர் துணிக்கடை உரிமையாளர், "போலீஸ்காரர்கள் கூட எங்கள் கடைகளுக்கு ஆவணங்களை கேட்டு வருகிறார்கள்" என்று கூறினார்.
லாகூர் மற்றும் நங்கனா சாஹிப்பில் உள்ள சீக்கியர்களில் பெரும்பான்மையானவர்கள் வணிகர்கள் அல்லது ஹக்கீம்கள்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் முக்கிய சீக்கிய தலைவர் கோபால் சிங் சாவ்லா, ஆடியோ செய்திகளை உறுதிப்படுத்தியதோடு, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள அரசாங்கம் சீக்கியர்களின் உயிர்களுக்கும், மத இடங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில், பாகிஸ்தானில் சீக்கியர்களின் புனிதமான ஆலயங்களில் ஒன்றான நங்கனா சாஹிப், இம்ரான் சிஷ்டி தலைமையிலான கும்பலால் தாக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், நங்கனா சாஹிப்பைச் சேர்ந்த ஒரு சீக்கிய சிறுமி கடத்தப்பட்டு இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு பாகிஸ்தானில் முஸ்லீம் மனிதர் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மணமுடிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இது தவிர, பாகிஸ்தானில் சீக்கிய சமூகம் குறிவைக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. இதில் முன்னாள் பி.எஸ்.ஜி.பி.சி தலைவர் சவர்ன் சிங், பெஷாவரைச் சேர்ந்த சரஞ்சித் சிங் ஆகியோரது கொலையும் கே.பி.கே.-வின் ஜஸ்பால் சிங்கின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவமும் அடங்கும். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 25 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் காவல்துறையினர் சீக்கியர்களின் விவரங்களை கோருவதற்கும் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் இணைந்த பயங்கரவாதிகள் இருவரை கைது செய்தததற்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் ஜீ நியூஸுக்குத் தெரிவித்தன.
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர், "பாகிஸ்தானில் கணிசமான எண்ணிக்கையிலான சீக்கியர்கள் பாஷ்தோ மொழியைப் பேசுகிறார்கள். அவர்களில் பலர் ஆப்கானிஸ்தானிலிருந்து (Afghanistan) குடிபெயர்ந்து கே.பி.கே, பேஷாவர் மற்றும் நாங்கனா சாஹிப்பில் வசிக்கின்றனர்." என்று தெரிவித்தார். மணீந்தர் சிங் பாஷ்தோவில் செய்திகளை வெளியிட்டதற்கு அதுவே காரணம்.
எனினும், இது குறித்து ஈடிபிபியின் தலைவர் டாக்டர் ஆமீர் அஹ்மத்திடம் கேட்கப்பட்டபோது, சீக்கியர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தியை அவர் முற்றிலுமாக மறுத்தார். "பாகிஸ்தானில் அத்தகைய பிரச்சினை எதுவும் இல்லை" என்று அவர் பதிலளித்தார்.
ALSO READ: மர்மமான வுஹான் ஆய்வகம்: சீனா மறைத்த மற்றொரு தகவல் வெளிவந்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR