எங்களைக் காப்பாற்றுங்கள்..பிரதமர் மோடியின் உதவியை நாடும் இலங்கை

இலங்கையில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 4, 2022, 05:17 PM IST
  • பொருளாதார நெருக்கடியில் இலங்கை
  • மோடியின் உதவியைக் கேட்கும் எதிர்க்கட்சி
  • எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்
 எங்களைக் காப்பாற்றுங்கள்..பிரதமர் மோடியின் உதவியை நாடும் இலங்கை title=

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மின்சாரம் இன்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்து அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டம் வலுத்து வரும் சூழலில் இலங்கையில் 26 அமைச்சர்கள் நேற்றிரவு பதவி விலகினர். இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அழைப்பு விடுத்த அதிபர் கோத்தபய ராஜபக்ச, எதிர்க்கட்சியினரும் அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | எரிபொருள் பற்றாக்குறை..இனி 10 மணி நேர மின் வெட்டு

இலங்கையின் நிலையை கருத்தில் கொண்டு இந்திய பிரதமர் மோடி உதவ முன்வர வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். தயவு செய்து முடிந்தவரை இலங்கைக்கு உதவ முயற்சிக்க வேண்டுமனக் கேட்டுக் கொண்டுள்ள அவர், தங்களது தாய்நாட்டை காக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அமைச்சரவை முழுவதும் ராஜினாமா செய்ததை நாடகமென விமர்சித்த அவர், நாட்டு மக்களை முட்டாளாக்கவே இந்த நாடகம் இயற்றப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்த நிலையில், சீனாவிடம் நெருக்கம் காட்டிய இலங்கையும் தற்போது இந்தியாவின் உதவியை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிரபாகரனால் முடியாததை ராஜபக்‌ஷே செய்துவிட்டார் - இலங்கை எம்.பி சர்ச்சை பேச்சு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News