சுக்கிரன் பெயர்ச்சி: பெண் கிரகமான சுக்கிரன் அக்டோபர் 2, 2023 அன்று மதியம் 00:43 மணிக்கு சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். காதல் மற்றும் திருமணத்திற்கான கிரகமான சுக்கிரனின் இந்தப் பயணம், சூரியனால் ஆளப்படும் ஆண் ராசியான சிம்மத்திற்கு செல்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்? இதை விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
சுக்கிரனின் பெயர்ச்சியால் உறவுகள் மற்றும் குடும்ப விஷயங்களில் ஈகோ தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானதாக இருக்கும். ஜாகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்க்கையில் திருப்தி, நல்ல ஆரோக்கியம் மற்றும் உறுதியான மனம் இருக்கும். அதோடு உயர் வெற்றியுடன் அனைத்து சாதகமான முடிவுகளையும் வழங்கலாம். ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்றுள்ள சிம்ம ராசிக்காரர்கள் சுகபோகமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
சுக்கிரன் வலுவிழந்தால், சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி குறையும், பிணைப்புகள் குறையும். வாழ்க்கை துணையுடன் நல்ல உறவைப் பேணுதல் என்பது சிம்மசொப்பனமாகிவிடும்.
அக்டோபர் இரண்டாம் தேதி மாறும் சுக்கிரன், டிசம்பர் மாதம் வரை சிம்மத்தில் இருப்பார். அப்போது சுக்கிரனின் அருளால் செல்வ செழிப்புகளைப் பெற்று மகிழ்ச்சியடைப்போகும் ராசிகள் யார் என்பதை தெரிந்துக் கொள்வோம். எந்த ஒரு கிரகத்தின் உதயமும், அஸ்தமனமும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். செப்டம்பர் 4 ஆம் தேதி, சுக்கிரன் கடக ராசிக்கு மாறிய நிலையில், கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு சுக்கிரன் மாற இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கிறது.
சுக்கிரனின் சிம்மப் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
துலாம்
ஜோதிட சாஸ்திரப்படி துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சாதகமான பலன்களைக் கொடுப்பார். இந்த காலகட்டத்தில், வருமானம் அதிகரிக்கும். விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் சுக்கிரன், புதிய வேலைகளையும் கொடுப்பார். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும், நிலுவையில் இருந்த பணம், வாராக்கடன் போன்றவை உங்களை வந்து சேரும்.
மேலும் படிக்க | புதனுடன் இணைந்து வளத்தையும் செழிப்பையும் வழங்கும் சூரிய பகவான்! புதாதித்ய ராஜயோகம்
மிதுனம்
சுக்கிரன் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைக் கொடுப்பார். பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் தெரியும். பொருளாதார நிலை மேம்படும் என்பதால், இதுவரை எதிர்கொண்ட நிதி சிக்கல்களை சமாளிக்கலாம். பரம்பரை சொத்துக்களில் லாபம் கிடைக்கும். கடின உழைப்பாளிகளுக்கு சுக்கிரன் அருளாசி புரிவார்.
கன்னி ராசி
சுக்கிரனின் சஞ்சாரம், கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். நிதி நிலை மேம்படும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சாதகமான நேரம் இது. , கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல வருவாயை ஈட்டிக் கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ராஜயோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ