Top 10 world Headlines: உலகச் செய்திகள் அமெரிக்கத் தேர்தல் 2020 முதல் கோவிட் தடுப்பூசி வரை...

அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, இஸ்ரோ என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய   செய்திகளின் தொகுப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2020, 12:48 AM IST
Top 10 world Headlines: உலகச் செய்திகள் அமெரிக்கத் தேர்தல் 2020 முதல் கோவிட் தடுப்பூசி வரை...   title=

துடெல்லி: அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, இஸ்ரோ என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய   செய்திகளின் தொகுப்பு...

  • அமெரிக்க தேர்தல் விவாத்த்தில் போட்டி வேட்பாளரான Bidenஐ, அதிபர் டொனால்ட் டிரம்ப் தரக்குறைவாக நடத்துவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் மிச்சேல் ஒபாமா குறைகூறியுள்ளார்.  
  • COVID-19 தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் தயாராகலாம் என்று உலக சுகாதார அமைப்பான WHOவின் தலைவர் Tedros கருத்து தெரிவித்துள்ளார்.
  • கருந்துளைகள் குறித்த ஆராய்ச்சிக்காக பிரிட்டனின் ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்ட் ஜென்சல் மற்றும் அமெரிக்காவின் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  
  • 'pro-independence' என்று கூறி, வகுப்புகளில் ஹாங்காங் நகரத்திற்கு விடுதலை வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த ஹாங்காங் ஆசிரியர் தாக்கப்பட்டார்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) 'Small Satellite Launch Vehicle (SSLV)' என்ற தனது தனது புதிய ராக்கெட் ஒன்றை 2020 டிசம்பருக்கு முன்னதாக விண்ணில் ஏவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்..  
  • டச்சு நாட்டைச் சேர்ந்த Jan Wildschut என்ற மருத்துவர், இயல்பாக குழந்தை பெற முடியாதவர்களுக்காக செயற்கை கருவூட்டல்  சிகிச்சையை கொடுத்து வந்தார். அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெறுவதாக நினைத்த பெண்களுக்கு விந்தணுக்களை கொடுத்து 17 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். அவர் 2009ஆம் ஆண்டிலேயே உயிரிழந்துவிட்டார். ஆனால் டி.என்.ஏ பரிசோதனை மூலமாக இந்த மோசடி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதையும் படிக்கலாமே | செயற்கை கருதரித்தலில் முறைகேடாக 17 குழந்தைகளுக்கு தந்தையான Fertility Doctor-இன் மோசடி

  • பண மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் Ahmed Adeebக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  
  • வார்னர் பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்பு திட்டங்களில் மாறுதலை செய்துள்ளது. 'Batman' திரைப்படம் 202ஆம் ஆண்டிலும், 'Matrix 4', 2021ஆம் ஆண்டிலும் தயாரிக்கப்படும்.
  • இத்தாலி மற்றும் பிரான்சில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. அதுமட்டுமல்ல, கல்லறைகளில் புதைக்கப்பட்ட சடலங்களையும், வெளியில் கொண்டு வந்து சேர்த்து அனைவருக்கும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது
  • துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவின் அல் பாப்பில் செவ்வாய்க்கிழமையன்று கார் வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்:

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News