ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த முடியாது: பிரிட்டன் நீதிமன்றம்

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என அமெரிக்க முயன்று வரும் நிலையில், அதை அனுமதிக்க முடியாது என்று பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2021, 01:49 PM IST
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர்.
  • ஜூலியன் அசாஞ்சே மீது உளவு பார்த்தல் உள்பட 18 வழக்குகளை பதிவு செய்தது அமெரிக்கா.
  • விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா ஸ்வீடன் நாட்டிற்கு பல நெருக்கடிகளை தந்தது.
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த முடியாது: பிரிட்டன் நீதிமன்றம்  title=

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் என்பது அனைவரும் அறிந்ததே.அவர் தனது விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்கா குறித்த பல ரகசிய தகவல்களை வெளியிட்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டு,  அசாஞ்சே ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் , அமெரிக்கா செய்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் சமபவங்கள், உளவு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விதமான ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவல்கள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

ஜூலியன் அசாஞ்சேவை (Julian Assange) அமெரிக்காவுக்கு (America) நாடு கடத்த வேண்டும் என அமெரிக்க முயன்று வரும் நிலையில், அதை அனுமதிக்க முடியாது என்று பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

ALSO READ | Jack Ma: மாயமான அலிபாபா நிறுவனர் ஜாக் மாவை சீனா அரசு என்ன செய்தது?

ஜூலியன் அசாஞ்சே மீது உளவு பார்த்தல் உள்பட 18 வழக்குகளை பதிவு செய்த அமெரிக்கா, அவரை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 

அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஜூலியன் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்வீடன் நாட்டில் அவர் தஞ்சம் புகுந்த போதே, அவரை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா ஸ்வீடன் நாட்டிற்கு பல நெருக்கடிகளை தந்தது. அப்போது, 2012ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி சென்ற ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் (London) உள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

ஆனால், அது நீடிக்கவில்லை, 2019ஆம் ஆண்டில் ஈகுவடார்  தூதரகத்தில், பிரிட்டன் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்தே, ஜூலியன் அசாஞ்சேவை, விசாரணக்காக நாடு கடத்த வேண்டும் என அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) மனுத்தாக்கல் செய்தார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடியாது என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி ஜூலியன் அசாஞ்சே மனுத்தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 175 ஆண்டுள் வரை அமெரிக்கா சிறை தண்டனை விதிக்கக் கூடும்.

ALSO READ | குழந்தை பெற்றுக் கொண்டால் பணத்தை அள்ளிக் கொடுக்கும் நாடு எது தெரியுமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News